(1697)

(1697)

வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,

ஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,

கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார்,

ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே.

 

பதவுரை

வார் கொள்

கச்சு அணிந்த

மென் முலை

மெல்லிய முலைகளையடைய

மடந்தையர் அவர்

(திருவாய்ப்பாடியிலுள்ள) அப்பெண்கள்

தட கடல் வண்ணன்

பெரிய கடலின் நிறம் போன்ற நிற முடையனான கண்ணபிரானுடைய

தாளை

திருவடிகளை

நயந்து

ஆசைப்பட்டு

ஆர்வத்தால்

அன்பினால்

முன் புலம்பிய புலம்பலை

முன்பு கதறின கதறலை

அறிந்து

உட்கொண்டு,

கார் கொள் பை பொழில் மங்கையர் காவலன்

மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான

கலிகன்றி

ஆழ்வார்

உரைசெய்த

அருளிச் செய்த

ஒலி

இச்சொற்களை

வல்லார்

ஓதியுரணவல்லவர்கள்

ஏர்கொள்

அழகிய

வைகுந்தம் மா நகர்

பரமபதமென்னுந் திருநாட்டிலே

புக்கு

புகுந்து

இமையவரோடும்

நித்யஸுரிகளோடே

கூடுவர்

சேரப்பெறுவர்கள்.

 

English Translation

This garland of sweet Tamil Songs by monsoon covered-graves-Mangai king kalikanri recalls the lament of a coiffured dome desirous of the ocean-hued Lord’s feet.  Those who master it will enter the beautiful vaikunta and live with the celestials.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top