(1690)

(1690)

ஆயன் மாயமே யன்றிமற் றென்கையில் வளைகளும் இறைநில்லா,

பேயின் ஆருயி ருண்டிடும் பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,

தூய மாமதிக் கதிர்ச்சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால்,

ஆயன் வேயினுக் கழிகின்ற துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே.

 

பதவுரை

ஆயன்

கண்ணபிரானுடைய

மாயமே அன்றி மற்று என்?

வஞ்சனை தவிர வேறு என்ன இருக்கிறது? (ஒன்றுமில்லை)

வளைகளும்

வளைகளும்

கையில் இறை நில்லா

கையில் க்ஷணகாலமும் தங்குவதில்லை;

பேயினார்

பேய்ச்சியாகிய பூதனையினுடைய

உயிர்

பிராணனை

உண்டிடும் பிள்ளை

உண்டு அவளை முடித்த பிள்ளை

நம் பெண் உயிர்க்கு

(அவளைப்போல்) பெண்ணாய்ப் பிறந்த நம்முடைய பிராணனுக்கு

இரங்குமோ

தயை பண்ண ப்ரஸக்தி யுண்டோ?

தூய மா மதி

மறுவற்ற சந்திரனுடைய

கதிர்

கிரணங்கள்

சுட

தஹிப்பதனாலே

இணை முலை

இரண்டு முலைகளும்

வேகின்றது

தீப்பற்றி யெரிகி்ன்றன;

ஆல்

அந்தோ! ;

துணை இல்லை

(எரியும் நெருப்பையவிக்கத்) துணையாவாரில்லை;

உள்ளமும்

மனமும்

ஆயன்

கண்ணபிரானுடைய

வேயினுக்கு

வேய்ங்குழலுக்கு ஈடுபட்டு

அழிகின்றது –

மாய்கின்றது;

அஞ்சேல்

‘பயப்படாதே’ என்று அபயமளிப்பாராருமில்லையே.

 

English Translation

Other than krishna’s cruelty, nothing stays on my hands, not my bangles Can the fellow who drank the ogress life have any compassion for us domes lives?  The rays of the full Moon scorch me.  Alas, with none to help, my twin breasts are sizzling.  My heart breaks for the cowherd’s flute.  No one to say “Fear not”, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top