(1673)
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
பதவுரை
|
மடல் எடுத்த |
– |
மடல்களை உயரக்கொண்ட |
|
நெடு |
– |
நீண்ட |
|
தாழை |
– |
தாழைச் சொடிகளின் |
|
மருங்கு எல்லாம் |
– |
பக்கங்களிலெல்லாம் |
|
வளர் |
– |
வளர்கின்ற |
|
பவளம் |
– |
பவழங்களானவை |
|
திடல் எடுத்து |
– |
மேடுகளிலே படர்ந்து |
|
சுடர் இமைக்கும் |
– |
ஒளியுடன் விளங்கப்பெற்ற |
|
திருக்கண்ணபுரத்து, உறையும்-; |
||
|
அன்று |
– |
முன்பொருகாலத்தில் |
|
இரணியனை |
– |
ஹிரண்யாஸுரனை |
|
அடல் |
– |
யுத்தத்திலே |
|
அடர்த்து |
– |
நெருக்கி |
|
முரண் அழிய |
– |
(அவனுடைய) மிடுக்கு அழியும் படியாக |
|
அணி உகிரால் |
– |
அழகிய நகங்களாலே |
|
உடல் எடுத்த |
– |
(அவனது) உடம்பைப் பிளந்தொழிந்த |
|
பெருமானுக்கு |
– |
ஸர்வேச்வரனுக்கு |
|
என் ஒளி வளை இழந்தேன்-. |
||
English Translation
Tirukkannapuram has fields hedged with screwpine which bursts into flowers, and red corals grow with branches spreading light everywhere. Here resides the Lord who pierced Hiranya’s might chest with sharp claws. Alas, I have lost my beautiful golden bangles to him.
