(1644)

(1644)

திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய

விருத்தனை,விளங் கும்சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய

அருத்த னை,அரி யைப்பரி கீறிய அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற

கருத்த னை,களி வண்டறை யும்பொழில் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

பதவுரை

திருத்தனை

எப்போதும் பூர்ணத்ருப்தி யுள்ளவனும்
திசை நான்முகன் தந்தையை

சதுர்முகப்ரஹ்மாவுக்கு ஜனகனும்
தேவதேவனை

தேவாதிதேவனும்
மூவரில்

(‘அரி அயன் அரன்’ என்று சொல்லப்படுகிற மும்மூர்த்திகளுள்
முன்னிய

முற்பட்டிருக்கிற
விருத்தனை

தலைவனும்
விளங்கும் சுடர் சோதியை

விளங்குகின்ற தேஜோராசிமயமான திவ்யமங்களவிக்ரஹத் தையுடையவனும்
விண்ணை

மேலுலகங்கட்கு நியாமகனும்
மண்ணினை

மண்ணுலகுக்கு நியாமகனும்
கண்ணுதல் கூடிய அருத்தனை

நெற்றிக்கண்ணனான சிவன் கூடப்பெற்ற (தனது திருமேனியிற்)பாதிபாகத்தையுடையவனும்
அரியை

ஹரியென்னுந் திருநாமமுடையவனும்
பரி கீறிய அப்பனை

குதிரையாய்வந்த அஸுரனைக் கிழித்த உபகாரனும்
அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை

நீரிலுள்ள பாடபாக்நியானது ஜலமெல்லாம் தன்னிடத்தே வந்து சுவறும்படியிருக்குமா போலே ஸகலபதார்த்தங்களும்  தன்னிடத்தே வந்து லயிக்கும்படி யிருக்கிற முழுமுதற்கர்த்தாவுமான எம்பெருமானை
களி வண்டு அறையும் பொழில்

களித்த வண்டுகள் இசைபாடுஞ் சோலைகளையுடைய

கண்ணமங்கையுள், கண்டுகொண்டேன்-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னும் வடசொல் ‘திருத்தன்’ எனத்திரிந்தது.  அவாப்த ஸமஸ்த காமனாகையாலே எப்போதும் திருப்தியையுடையவன் என்றபடி.  திசைநான்முகன் தந்தையை இவ்வருகுண்டான உலகங்களைப் படைப்பதற்காகப் பிரமனைத் தோன்றுவித்தவ னென்கை.  ‘திசைமுகன்’ என்றாவது ‘நானமுகன்’ என்றாவது பிரயோகிக்கவேண்டியிருக்க, ‘திசைநான்முகன்’ என்றது தமிழ் வழக்கு.  என்னும் வடசொல் விருத்தன் எனத்திரிந்தது.

கண்ணுதல் கூடிய அருத்தன் நுதல்-நெற்றி; நெற்றியிற் கண்ணையுடையவன் ருத்ரன்; அவன் கூடிய த்தையுடையவன்.  அரி – ஹரி. பரி – குதிரை; கேசியென்னு மசுரன்.

அப்பில் ஆரழலாய் நின்ற அப்பு – ஜலம்; (வடசொல்) ஜலத்திலுள்ள ஆரழல் – படபாக்நி; அது ஜலாம்சமெல்லாம் தன்னிடத்திலே வந்து சுவறும்படி யிருக்குமாபோலே ஸகல பதார்த்தங்களும் தன் பக்கலிலே வந்து லயிக்கும்படி யிருக்கிறவன் என்கை.  என்னும் வடசொல் ‘கருத்தன்’ எனத் திரிந்தது.

English Translation

The satisfied one, the father of Brahma, the Lord of gods, the foremost of the Tri-murti, the radiant one, the Earth, the sky, the Lord with Siva on his person, the man-lion, the horse-slayer, the dissolving aspect of water, the Lord surrounded by bee-humming groves, -I sought and found him in Kannamangai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top