(1520)

(1520)

தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்

மூவாமை நல்கி முதலை துணித்தானை

தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை

நாவாயு ளானை நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

தூ வாய புள் ஊர்ந்து

பரிசுத்தமான வாயையுடைய பெரிய திருவடியை வாஹனமாகக்கொண்டு

துறை வந்து

வந்து சேர்ந்து

வேழம் மூவாமை நல்கி

ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி அருள்புரிந்து

முதலை துணித்தானை

முதலையை இரு துண்டமாக்கி யொழித்தவனும்

தேவாதி தேவனை

நித்யஸூரிகளுக்குத் தலைவனும்

செம் கமலம் கண்ணானை

செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையனும்

நாவாய் உளானை

திருநாவாயென்னும் திருப்பதியிலிருப்பவனுமான எம்பெருமானை

நறையூரில், கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (துஸவாய புள்) ‘தூ வாய’ என்றும், ‘தூ ஆய’ என்றும் பிரிக்கலாம்.  தூ ஆய வே தஸ்வரூபியாகையாலே ஸ்வத பரிசுத்தனான என்றபடி.

 

English Translation

The Lord came leading his garuda bird to the lake, rescued the elephant Gajendra, by slicing the crocodile with his discus.  He is the Lord of gods, red-eyed senkanmal. I have found him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top