(1494)

(1494)

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த,

அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர்,

பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி,

நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே.

 

பதவுரை

முப்புரி நூலும்

யஜ்ஞோபவீதத்தையும்

முந்து நூலும்

அநாதியான வேதாக்ஷர ராசியையும்

முன் ஈந்த

முன்னே (தனக்குத்) தந்த

அந்தணாளன்

(ஸாந்தீபிநி யென்னும்) பிராமணனுடைய

பிள்ளையை

(கடலில் மூழ்கியிறந்த) புத்திரனை

அந்நான்று

(குரு தக்ஷிணை ஸமர்ப்பிக்கிற) அக்காலத்தில்

அளித்தான்

(மீட்டுக்) கொடுத்தருளின பெருமானுடைய

ஊர்

திவ்யதேசம் (எதுவென்றால்,)

புள்

பறவைகள்

பொந்தில்

மரத்தின் பொந்துகளில்

வாழும்

வாழ்கிற

பிள்ளைக்காகி

குட்டிகளின் ஆஹாரத்துக்காக

ஓடி

ஓடிவந்து

நந்து

நத்தைகளை

வாரும்

திரட்டிக்கொண்டு போகப்பெற்ற

பைம்புனல் வாவி

தெளிந்த நீரையுடைய தடாகங்களையுடைத்தான

நறையூர்

திருநறையூராம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ‘முந்துநூலீந்த’ என்றது – வேதமோதுவித்த என்றபடி.  ‘முப்புரிநூலீந்த’ என்றநு உபநயநம் செய்வித்த என்றபடி.  உபநயநம் செய்வித்தபிறகே வேதமோதுவித்தல் முறைமை யாதலால் ‘முப்புரிநூலும் முந்துநூலும் முன்னீந்த’ என இயைத்துக்கொள்ளுதல் பொருந்தும்.  எனபர் வடநூலார்.  கடலிற்புகுந்து முடிந்த ஸாந்தீபினி புத்திரனைப் பிழைப்பித்து மிடு்டுக்கொணர்ந்து கொடுத்த பெருமானுறையுமிடம் திருநறையூர்.  மரத்தின் பொதும்பிலேவாழுங் குட்டிக்காக இரைதேடும் பறவைகள் நத்தைகளை வாரிக்கொண்டு வரப்பெற்ற நீர்நிலங்களையுடையதாம் அத்திருப்பதி.  வாவி-‘வாவீ’என்னும் வடசொல் விகாரம்.

 

English Translation

The Lord went to the sea and brought back the son for his preceptor. He resides in Naraiyur where birds go far to find snall-food and fly back to their hungry nestlings in freeholes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top