(1484)

(1484)

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன்

பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன்,

சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர்,

நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

 

பதவுரை

வில் ஏர் நுதலார்

வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர்

வேட்கையை மாற்றி

(முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து

சிரித்து

பரிஹாஸம்பண்ணி

இவன் பொல்லான்

‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’

திரைந்தான்

சதை சுருங்கினான்

என்னும்

என்று (இகழ்ந்து) சொல்லும்படியான

புறன் உரை

இழிவான வார்த்தைகள

கேட்பதன் முன்

கேட்கநேருவதற்கு முன்னே,-

சொல் ஆர்

பதங்கள் நிரம்பிய

நான்கு மறை

நான்கு வேதங்களையும்

ஓதி

அதிகரித்து

உலகில்

இவ்வுலகில்

நிலாயவர்

(அவ்வேதங்களை) ஸ்தாபிக்கு மவர்களாய்

நல்லார்

நல்லொழுக்கமுடையரான வைதிகர்வாழ்கிற

நறையூர்

திருநறையூரை

நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநறையூரில் வாழ்பவரெல்லாம் ஸ்ரீமத்வேதமார்க்கப்ரதிஷ்டாபநாசார்யர்கள் என்பது மூன்றாமடி.

 

English Translation

O Heart! Before bow-eyebrowed dames change their loves and laugh saying, “This man is wicked, he is broke” and speak falsities within earshot, let us go to the Lord surrounded by good Vedic seers who propagate the chants of the four Vedas, -He resides in Naraiyur, -and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top