(1637)
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,
பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே.
பதவுரை
|
சீர் ஆர் நெடு மறுகில் |
– |
சீர்மைபொருந்திய நீண்ட திருவீதிகளை யுடைத்தான |
|
சிறுபுலியூர் |
– |
சிறுபுலியூரில் சலசயனத்து |
|
சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கின்ற) |
||
|
ஏர் ஆர் |
– |
அழகுமிக்க |
|
முகில்வண்ணன் தன்னை |
– |
மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய் |
|
இமையோர் பெருமானை |
– |
நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,- |
|
கார் ஆர் வயல் மங்கைக்கு |
– |
கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு |
|
இறை |
– |
தலைவரான |
|
கலியன் |
– |
ஆழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை இவை |
– |
இச்சொல் மாலைகளை |
|
பாரார் |
– |
பூமியிலுள்ளவர்கள் |
|
பரவி |
– |
சொல்லி |
|
தொழ |
– |
(அப்பெருமானைத்) தொழுமளவில் |
|
பாவம் |
– |
பாவங்கள் |
|
பயிலா |
– |
நிற்கமாட்டா (தொலைந்துபோம்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- செல்வம் மிக்க திருவீதிகளை யுடைய சிறுபுலியூரில் சலசயனக்கோயிலிலுறையும் பெருமான் விஷயமாகத் திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய இத்திருமொழியை வாயாலேசொல்லி ஆச்ரயிக்கவே, பாபங்கள் தாமே ‘நமக்கு இவ்விடம் இருப்பல்ல’ என்று விட்டுப்போம் என்று பயனுரைத்ததாயிற்று.
‘பாரார்’ என்கையாலே பூமியிற் பிறந்தாரெல்லாரும் இது கற்க அதிகாரிகள் என்றதாகும்.
English Translation
This garland of songs by fertile-fields Mangai king kaliyan, is on the Lord of Sirupuliyur Salasayanam with wide streets, Lord of cloud hue, Lord of the celestials. Those who master it and offer worship will never accrue bad karma.
