(1624)
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப் பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்,
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
பதவுரை
|
செம் தமிழும் |
– |
செவ்விய தமிழ்ப்பாஷையும் |
|
வடகடலையும் |
– |
ஸம்ஸ்க்ருத பாஷையும் |
|
திகழ்ந்த |
– |
விளங்குகின்ற |
|
நாவர் |
– |
நாக்கையுடையவர்களும் |
|
திசை முகனை அனையவர்கள் |
– |
(தனித்தனி) பிரமனை யொத்தவர்களுமான |
|
செம்மை மிக்க அந்தணர் தம் |
– |
நற்குணங்கள் நிறைந்த ப்ராஹ்மணர்களது |
|
ஆகுதியின் புகை ஆர் |
– |
ஹோம்ஞ்செய்வதனால் தோன்றுகின்ற புகை நிரம்பப்பெற்றுள்ள |
|
செல்வத்து |
– |
சிறப்பையுடைய |
|
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;) |
||
|
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி |
– |
பந்து பொருந்திய மெல்லிய கை விரல்களையுடைய சீதையின் நிமித்தம் |
|
மீது பகலவன் இயங்காத இலங்கை வேந்தன் |
– |
(தனக்கு நேராக) மேலிடத்திலே (அச்சத்தினால்) ஸூர்யனும் ஸஞ்சரிக்கமாட்டாத இலங்கைக்கு அரசனான இராவணனது. |
|
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் |
– |
அழிவில்லாத வலிய தோள்களும் தலைகளும் |
|
புரண்டு வீழ |
– |
(அறுபட்டுக்)கீழ் விழுந்து புரளும்படி |
|
அடு கணையால் |
– |
கொல்லுந் தன்மையுள்ள அம்பினால் |
|
எய்து |
– |
பிரயோகித்து |
|
உகந்த |
– |
மகிழ்ந்த |
|
அம்மான் |
– |
தலைவனாவான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர்’ எனறதனால் அத்திருப்பதியிலுள்ள அந்தணர் திராவிடவேதம் ஸம்ஸ்க்ருத வேதம் என்னும் இரண்டு வேதங்களிலும் வல்லவராவரென்பது தோன்றும். தமிழுக்கச் செம்மை – செவிக்கினிய செஞ்சொல்லா யிருத்தலோடு அர்த்தத்தை நேராகக் காட்டவல்லதாயிருத்தல். ஆதிகாலத்தில் ஸம்ஸ்க்ருதம் வடதிசையில் இமயமலைப் பிராந்தத்தில் கங்காதீரத்தில் காசி முதலிய இடங்களில் விசேஷமாய் வழங்கி வந்ததனால் வடமொழி யென்றும் வடகலையென்றும் வழங்கப்படுமென்ப.
ஆஹுதி – வடசொல்; அக்நியில் மந்த்ரபூர்வமாக ஹோமஞ்செய்யப்படும் நெய் முதலிய ஹவிஸ்ஸுக்கள்.
English Translation
The Lord of goods resides with pleasure in beautiful Alundur, where Brahma-like Vedic seers of high merit, adept in reciting sweet Tamil and Sanskirt works perform fire sacrifices, whose smoke clouds the sky, See he is the Lord who for the sake of his ball-clasping slender-fingers-Sita rained his fire arrows and cut the strong heads and arms of the mighty king of Lanka city.
