(1603)

(1603)

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,

உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்

கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்

கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே!

 

பதவுரை

பெரியானை

எல்லாசிலும் மேம்பட்டவனும்

அமரர் தலைவற்கும்

தேவேந்திரனுக்கும்

பிரமனக்கும்

ப்ரஹ்மாவுக்கும்

யானை உரி உகந்தானவனுக்கும்

யானைத்தோலை உகந்து திரிக்கின்ற சிவபிரானுக்கும்

 

உணர்வதனுக்கு அரியானை

உள்ளபடி அறியக்கூடாதவனும்

அழுந்தூர்

திருவழுந்தூரிலே

மறை யோர்கள்

வைதிகர்கள்

அடி பணியும்

திருவடிதொழப்பெற்ற

கரியானை

நீலநிறத்தனுமான பெருமான

அடியேன் கண்டுகொண்டு களித்தேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உரியானை – யானை உரி என்று மொழி மாற்றுக.  சிவபிரான் நடன மாடும்போது யானையுரியைப் போர்த்துக்கொண்டு நடனமாடுவனென்ப.

கரியான் – ‘கருமை’ என்னும் பண்படியாப் பிறந்த பெயர்.

 

English Translation

The Lord is hard to attain by even Brahma, Siva and Indra.  He is the dark one worshipped by Vedic seers, he resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top