(1568)

(1568)

சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்

மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்  மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,

நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,

கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே.

 

பதவுரை

சினம் இல்

கோபத்துக்கு இருப்பிடமாய்

செம் கண்

சிவந்த கண்களையுடைரான

அரக்கர்

ராக்ஷஸர்கள்

உயிர் மாள

உயிரிழந்து முடியும்படியாக

செற்ற

சீறின

வீல்லி என்று

வில்லை யுடையவனே! என்று

கற்றவர்

அறிவுடையவர்கள்

தம் தம்

தங்கள் தங்களுடைய

மனம் உள் கொண்டு

நெஞ்சிலே தியானித்து

என்றும் எப்போதும்

எக்காலத்திலும் எல்லா நிலைமைகளிலும்

நி்ன்று

நிலைநின்று

ஏத்தும்

தோத்திரம் பண்ணும்படியாகவுள்ளவனும்

மா முனியை

(அடியார்திறத்தில் இன்னமும் என் செய்வோமென்று, நெடிய சிந்தனைகளைச் செய்பவனும்

கனவில்

மாநஸாநுபவத்தில்

ஏழ் மரம் எய்த

ஸப்தஸால விருஷங்களை அம்பு எய்து துளைபடுத்தின

மைந்தனை

மிடுக்குடையவனும்

நனவில் சென்றார்க்கும்

கண்மலரப் பெற்றவர்களான சிறந்த ஞானிகட்கும்

நண்ணற்கு அரியானை

கிட்டக் கூடாதவனுமான

நறையூர் நின்ற நம்பியை-;

அடியேன் நான்

அடியேனாகிய நான்

கனவில்

மாநஸாநுபவத்தில்

இன்று கண்டேன்

இன்று காணப்பெற்றேன்;

கண்டமையால்

காணப்பெற்றதனால்

என் கண் இணைகள்

எனது இரண்டு கண்களும்

களிப்ப

ஸந்தோஷிக்க

களித்தேன்

நானும் ஸந்தோஷித்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநறையூர் நம்பியைக் கண்டுகளிக்கப் பெற்றேனென்கிறார். சில விசேஷணங்களால் நம்பியை விசேஷிக்கிறார் சினவிற் செங்கணென்று தொடங்கி.  ஆச்ரித விரோதிகளை அழியச் செய்து பக்தர்களைப் பாதுகாத்தருள்பவ னென்று கற்றவர்களால் கொண்டாடப் படுகின்றானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து.  கண்ட காட்சியிலே மஹாகோபிஷ்டர்களென்று தோன்றும் படியான கண்களை யுடையரான ராவணாதி ராக்ஷஸர்களை யொழித்த வில்லாள னென்று ஒவ்வொரு அன்பரும் தங்கள் தங்கள் நெஞ்சிலே கொண்ட துதிப்பார்களென்க.  மாமுனியை என்றது – ஆச்ரிதர்கட்கு எத்தனையோ நன்மைகள் செய்திருந்தும் ஒரு நன்மையும் செய்திலன் போல ‘என்ன செய்வோம்!’ என்றே நெடுகச்சிந்தித்துக் கொண்டிருப்பவனையென்றபடி.  “ ஒன்றுண்டு செங்கண்மால் யானுரைப்பது, உன்னடியார்க்கு என்செய்வனென்றே யிருத்தி நீ”  என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரங்காண்க.  முநி – மநநஞ்செய்வன்; (அதாவது) சிந்தித்துக்கொண்டிருப்பவன் தன்னுடைய திறலில் நம்பிக்கை யற்றவர்களுக்கு அரியன செய்தும் நம்பிக்கையுண்டாக்கு மியல்வினன் என்று காட்டுதற்காக ‘மரமேழெய்த மைந்தனை’ என்றார்.

நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை = கனவுக்கு எதிர்த்தட்டானது நனவு எனப்படும்; தெளிவைச் சொன்னபடி.  நல்ல தெளிவிலே யிருப்பவர்களான ஸநக ஸநந்த நாதிகளுக்கும் ஸ்வயத்நத்தாலே கிட்டுதற்கு அருமைப் பட்டிருப்பவனான எம்பெருமான் என்றபடி.

கனவில் கண்டேன் = இங்குக் கனவு என்றது ஸ்வப்நத்தையன்று; தெளிவற்ற மனநிலையைச் சொன்னப்படி.  தெளிந்தவர்களுங் காண முடியாத பெருமானைத் தெளியாத நான் கண்டுகொண்டே னென்கை.  அவன் காட்டக் காண்கிறாராகையாலே இது பொருந்தும்.  முந்துற நெஞ்சு கண்டது; பின்னைக் கண்களும் கண்டன; அதனால் களிப்படைந்தேன் என்றாராயிற்று.

 

English Translation

Angry ruddy-eyed fierce Rakshasa-killer! Lord ascestic. O the piercer of seven trees!  Noble bow wielder! Scholars and learned ones Hold thee dearly in their hearts, offer worship.  Hard to reach by even knowledge-wealth bearing ones,  Perfect Lord residing in Tirunaraiyur, -I this lowly self, saw him in my dream state, Seeing, my eyes and heart rose in abounding joy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top