(1569)
தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக்
காய்நி னைந்தருள் செய்யு மப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட
வாய னை,மக ரக்குழைக் காதனை மைந்த னைமதிள் கோவ லிடைகழி
யாயனை,அம ரர்க்கரி யேற்றையென் அன்ப னையன்றி யாதரி யேனே.
பதவுரை
|
தாய் நினைந்த கன்றே ஒக்க |
– |
தன் தாயாகிய பசுவை நினைக்கும் கன்றுபோல |
|
என்னையும் |
– |
அடியேனையும் |
|
தன்னையே நினைக்க செய்து |
– |
(எம் பெருமானாகிய) தன்னையே சிந்திக்கும்படி பண்ணி (அதற்கு மேலே) |
|
தான் எனக்கு ஆய் நினைந்து |
– |
எனக்கு வேண்டிய நன்மைகளை யெல்லாம் தானே சிந்தித்து |
|
அருள் செய்யும் அப்பனை |
– |
கிருபை பண்ணும் உபகாரகனும், |
|
அன்று |
– |
முன்பொருகாலத்தில் |
|
இ வையகம் |
– |
இவ்வுலகத்தை யெல்லாம் |
|
உண்டு |
– |
விழுங்கி (பின்பு) |
|
உமிழ்ந்திட்ட |
– |
வெளிப்புறப்பட விட்ட |
|
வாயனை |
– |
திருப்பவளத்தை யுடையவனும், |
|
மகரம் குழை காதனை |
– |
மகர கு்ணடலங்களைத் திருச்செவிகளில் அணிந்துள்ளவனும் |
|
மைந்தனை |
– |
நித்யயுவாவும் |
|
மதிள் கோவல் இடை கழி ஆயனை |
– |
திருமதில்களை யுடைய திருக்கோவலூரிடை கழியில் கோபாலனாய் நிற்பவனும் |
|
அமரர்க்கு |
– |
நித்யஸூரிகளினிடையே |
|
அரி ஏற்றை |
– |
சிங்கம் போலவும் காளை போலவும் செருக்குத் தோற்ற விருப்பவனும் |
|
என் அன்பனை அன்றி |
– |
என்னிடத்தில் அன்புடையவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து |
|
ஆதரியேன் |
– |
(வேறொருவனை) ஆதரிக்கமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கன்றானது எப்போதும் தன் தாயையே நினைத்துக் கொண்டிருக்குமாபோலே உலகுக்கெல்லாந் தாயாகிய தன்னையே நான் நினைந்திருக்குமாறு செய்தவனென்கிறார் முதலடியில். “பரந்த சிந்தை யொன்றி நின்று நின்னபாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே” என்கிறபடியே எம்பெருமானது அருளின்றியே அவனை நினைத்திருத்தல் அமையாதாதலால் ‘என்னையும் தன்னையே நினைக்கச் செய்து’ என்கிறார். நம்முடைய நினைவு மாறினாலும் தான் நினைவுமாறாதே “அஹம் ஸ்மராமி மதபக்தம நயாமி பரமாம் கதிம்” என்ற படியே நம்மை நினைத்திருந்து அருள் செய்பவ னென்கிறது ‘தானெனக்காய் நினைந் தருள் செய்யு மப்பனை’ என்றதனால். அப்படி எங்கேனுங் கண்டதுண்டோ வென்ன, உலகமெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப் பிழைக்கும்படி தானே அபேக்ஷா நிரபேக்ஷாமாகப் பாதுகாத்தருளின செயல் திருஷ்டாந்தமாகப் போராதோ வென்று அதனை யெடுத்துரைக்கின்றார் அன்றிவ்வையகமுண் டுமிழ்ந்திட்ட வாயனை என்று.
அப்படி அவன் உதவி செய்தருளாதே நம்மை உபேக்ஷிப்பவ னென்றே வைததுக் கொண்டாலும், விடக்கூடாத அழகு படைத்தவன் காண்மின் என்கிறார் மகரக் குழைக்கதானை என்பதனால். மின்னு மணிமகர குண்டலங்கள் வில்வீச நிற்கு மழகுக்குத் தோற்றுப்பேசுகிறபடி. மைந்தன் – எப்போதும் யௌவனமேயா யிருப்பவன்.
English Translation
Like calf that is bleating for mother cow, I do stand and cry seeking my mother-Lord, Constantly I keep thinking of the Lord alone, who in yore became a child on a floating leaf. He adorns himself with Makara-ear rings. He become the fourth person among the first Three. The Alvars who were huddled in a vestibule. He’s a lion among gods and my only love.
