(1428)

(1428)

கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன்,

பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும்,

செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர்

பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே,

 

பதவுரை

ஐக இலங்கு அழி சங்கன்

திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும்

கரு முகில் திரு நிறத்தன்

காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும்

பொய் இலன்

(சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும்

மெய்யன்

(அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும்

தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும்

(யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும்,

அலர் கமலம் ஓங்கு செய்

மலர்ந்த தாமரைகள் உயர்ந்திருக்கப்பெற்ற கழனிகளையும்

செறி பொழில்

அடர்ந்த சோலைகளையும் உடைத்தான

தென் திருப்பேர்

தென்திருப்பேர் நகரில்

பை அரசு அணையான்

பரந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனமான பெருமானுடையனுமான பெருமானுடைய

நாமம் நான் பரவி உய்ந்த ஆறு ஏ

திருநாமங்களை நான் சொல்லி உஜ்ஜீவித்தபடி என்னே!.

 

English Translation

The dark cloud-cued Lord, wielder of the beautiful conch and discus, is no falsity but real, He accepts those who seek his refuge and makes them his devotees.  Amid the lotus-filled tanks and groves of Ten-Tirupper, he reclines on a hooded serpent, How easily have I attained him through chanting his names!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top