(1403)

(1403)

தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது

கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை,

வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த,

அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே,


பதவுரை

தம் சினத்தை தவிர்த்து அடைந்தார்

தங்களுடைய த்வேஷத்தை நீக்கிவிட்டுத் தன்னைவந்து பற்றினவர்களுக்கு

தவம் நெறியை

உபாய மார்க்கமாயிருப்பவனும்,

தரியாது

(தீம்புகளைப்) பொறுத்திருக்க மாட்டாமல்

கஞ்சனை கொன்று

கம்ஸனைக் கொன்றொழித்தவனும்,

அன்று

முன்பொருகாலத்தில்

உலகம்

உலகங்களை

உண்டு உமிழ்ந்த கற்பகத்தை

உண்பதும் வெளிப்படுத்துவதும் செய்த உதாரனும்

வெம் சினத்த கொடும் தொழிலோன்

வெவ்விய கோபத்தினால் செய்யக்கூடிய ஸம்ஹாரத் தொழிலையுடையனான ருத்ரனுடைய

விசை உருவை

மிக்க வேகத்தோடு கூடின வடிவை

அசைவித்த

(பாணாஸுர யுத்தத்தில் சலிக்கச் செய்தவனும்)

அம் சிறை புள் பாகனை

அழகிய சிறகுடைய பெரிய திருவடியை ஏறி நடத்துபவனுமான பெருமானை

யான் கண்டது தென் அரங்கத்தே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யரைவித்த அஞ்சிறைப் புடபாகனை = ருத்ரன் ஸம்ஹாரத்தொழிற் கடவுளாதலால் “வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்” என்று அவனைச் சொல்லுகிறது;  பாணாஸுர யுத்தத்தில் அவன் பட்டபாடு இங்கு அநுஸந்திக்கத்தக்கது.  (ஸ்ரீவிஷ்ணுபுராண ஐந்தாவது அம்சம் முப்பத்துமூன்றாம் அத்யாயம் நோக்குக.)

இங்கு “வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்” என்று (பெயரொன்றும் இன்றியே) பொதுப்படையாயிருத்தலால் பாணாஸுரனென்றும் பொருள் கொள்ளலாமென்பர்

 

English Translation

The Lord who is attained through the arduous path of given up anger, the Lord who killed Kamsa, the Lord who swallowed and brought fourth the world, the wishing free, the Garuda-rider who put to flight the swift runner Siva of terrible deeds, -I have seen him in Southern Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top