(1348)

(1348)

அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்

குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,

நறிய மலர்மேல் சுரும்பார்க்க  எழிலார் மஞ்ஞை நடமாட,

பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே!

 

பதவுரை

அறிவது அரியான்

(ஒருவர்க்கும் தம் முயற்சியாலே) அறியக் கூடாதவனும்

அனைத்து உலகும் உடையான்

எல்லாவுலகங்கட்கும் ஸ்வாமியானவனும்

என்னை ஆள் உடையான்

அடியேனை அடிமை கொண்டவனும்

குறிய மாணி உரு ஆய

வாமநப்ரஹ்மசாரி வேஷங்கொண்டவனும்

கூத்தன் (அவ்வேஷத்தோடு மாவலி வேள்வியில் எழுந்தருளும் போது)

விலக்ஷணமான நடையிட்டு எழுந்தருளினவனுமான பெருமான்

மன்னி அமரும் இடம்

இடைவிடாது நித்யவாஸம் பண்ணுமிடமாவது;-

சுரும்பு நறிய மலர்மேல் ஆர்க்க

‘சுரும்பு’ என்னுஞ் சாதி வண்டுகள் மணம்மிக்க புஷ்பங்களின் மீது (இருந்து கொண்டு) ரீங்காரம் செய்யப்பெற்றதும்

எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட

அழகுபொருந்திய மயில்கள் கூத்தாடப் பெற்றதும்

பொறி சிறை கொள் வண்டு இசை பாடும்

வரியையும் சிறகையுமுடைய வண்டினங்கள் இசைபாடப் பெற்றதுமான

புள்ளம் பூதக்குடி

திருப்புள்ளம் பூதக்குடியென்னுந் திருப்பதியாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அறிவதரியான் =  அறிய முடியாதவன் என்றால், ‘ஒருவராலும் அறிய முடியாதவன்’ என்று பொருளா? அன்றி, ‘சிலரால் அறிய முடியாதவன்? என்று பொருளா?’ என்று கேள்வி பிறக்கும்; ஒருவராலும் அறிய முடியாதவன் என்றால் முயற்கொம்பு, மலடிமகன், ஆகாசத்தாமரை முதலிய பொருள்கள் போல எம்பெருமானும் அடியோடு இல்லாதவன் என்றதாரும் : ஆகையாலே அது பொருளன்று; ‘பகவத் ஸ்வரூபத்தை நாமே முயன்று அறிந்திடுவோம் என்று முயல்பவர்களால் அறியக் கூடாதவன் என்று பொருள் கொள்க.  அவன் தானே தன் இன்னருளாலே தன் ஸ்வரூபஸ்வபாவங்களைக் காட்டிக்கொடுக்க அப்போது அறியலாகுமேயன்றி வேறுவிதமாக அறியலாகாதென்கை.  “திவ்யம் ததாமி தே சக்ஷ{: பச்யமேயோகமைச்வரம்” என்று அர்ஜுநனுக்குக் காட்டிக் கொடுத்தாற் போலக் காட்டிக் கொடுக்கில் காணவழியுண்டு.

 

English Translation

The-hard-to-comprehened Lord, bearer of all the worlds, who keeps me in this service, came as a little manikin and, danced over the worlds; he resides permanently, -amid groves where; little bees provide the drone for the bumble-bees that sing for the dance of the handsome peacocks,-in Pullam-Budangudi, yes, always!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top