(1468)

(1468)

துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம்

மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில்

பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது,நின்

திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே.

 

பதவுரை

திருவிண்ணகரானே!-

இன்பம்

(உன் அநுபவத்தினாலுண்டாகக்கூடிய) பேரின்பத்தை

துறப்பேன் அல்லேன்

தவிரமாட்டேன்;

துறவாது

அவ்வின்பத்தைத்தவிராதவனாகி

என்றும்

ஒருநாளும்

நின் உருவம் மறப்பேன் அல்லேன்

உன்வடிவழகை மறவாதவனாயிருக்கின்றேன்;

மறவாது

அவ்வடிவழகை மறவாதவனாகி

யான்

நான்

உலகில்

ஸம்ஸாரத்தில்

பிறப்பேன் ஆக எண்ணேன்

இனிப் பிறவியெடுக்க எண்ணமற்றவனாயிருக்கின்றேன்;

பிறவாமை பெற்றது

இனிப்பிறவாதபடி பேறுபெற்ற இதுதானும்

நின் திறத்தேன் ஆதன்மை யால்

உனக்கே ஆட்பட்டதனாலேயாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிற்றின்பங்களை நான் துறப்பேனேயன்றி, தேவரீருடைய அநுபவமாகிற பேரின்பத்தை ஒருநாளும் இழக்கமாட்டேன்; தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்கமுடியுமாகிலன்றோ இன்பத்தை நான் துறந்தவனாவேன்; வடிவழகை மறவாதவனாகையாலே இனபத்தைத் துறவாதவனாயினேன்; இப்படிப்பட்ட நான் இனிமேலும் இவ்விருள் தருமாஞாலத்தில் பிறந்து பிறந்து கஷ்டங்கள்பட நினைப்பேனோ? “மறந்தேனுன்னைமுன்னம்” என்று கீழ்நாட்களில் தேவரீரை மறந்திருந்தேனாகிலும் இனிமேலுள்ள காலம் மறவாதேயிருக்கப் பாரித்திருப்பவனாதலால் அடியேன் பிறவித்துயர்நீக்கி நித்யானந்த மநுபவிக்கவே உரியேனாயினேன் என்றாராயிற்று.

கீழ்த்திருமொழியில் “மறந்தேனுன்னை முன்னம் – அதனாலிடும்பைக்குழியிற் பிறந்தே யெய்த்தொழிந்தேன்” என்று மறதிக்குப் பலனாகப் பிறவித்துன்பம் பெற்றமை சொன்னார்; இதில் மறவாமைக்குப் பிறவாமைபெற்றமை சொன்னாரென்க.

 

English Translation

O Lord of Tiruvinnagar!  I have renounced all pleasures, always remembering your beautiful form.  No more shall I be born on Earth.  Freed of birth I have come to you, by your grace.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top