(1458)
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி அறுத்தேன்,
ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன்,
நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
புன் சொல் |
– |
(பிறர் சொல்லும்) அற்பமான வார்த்தைகளை |
|
நெஞ்சில் |
– |
நெஞ்சிலே |
|
பொறுத்தேன் |
– |
பொறுத்துக்கொண்டிருந்தேன்; |
|
ஐம்புலன்கள் கடன் ஆயின |
– |
பஞ்சேந்திரியங்களுக்கும் கடமையாக ப்ராப்தமாயுள்ள |
|
பொருள் இன்பம் என இரண்டும் |
– |
அர்த்தம், காமம் என்ற இரண்டையும் |
|
இறுத்தேன் |
– |
அநுபவித்துத் தீர்த்தேன்; |
|
ஆர்வம் செற்றம் |
– |
(வேண்டியவர்களிடத்தில்) ப்ரீதியென்ன, (வேண்டாதவர்களிடத்தில்) பகையென்ன ஆகிய இவற்றை |
|
வாயிலொட்டி |
– |
‘அவசியம் நிறைவேற்றி விடக்கடவுன்’ என்று பிரதிஜ்ஞை பண்ணி |
|
அறுத்தேன் |
– |
நிறைவேற்றி விட்டேன்; |
|
அவை தன்னை |
– |
அந்த ராகத்வேஷங்களை |
|
மனத்து அகற்றி |
– |
(இப்போது) நெஞ்சில் நின்றும் நீக்கினவனாய்க் கொண்டு |
|
வெறுத்தேன் |
– |
அவற்றில் வெறுப்புற்றவனாகி, |
|
திருவிண்ணகர் மேயவனே நின் அடைந்தேன் |
– |
திருவிண்ணகர்ப் பெருமானே! உன்னைச் சரணம் புகுந்தேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- புன் சொல் நெஞ்சில் பொறுத்தேன் = இதற்கு இரண்டு படியாகப் பொருளுரைக்கலாம்; ஆபாஸ பந்துக்கள் பேரும்படியான இழிவான சொற்களையெல்லாம் தாங்கிக்கொண்டிருந்தேன் என்னுதல்; ஸமஸ்த கல்யாண குணநிதியாய்ச் செந்தாமரைக் கண்ணணாயிருக்கிற ஸர்வேச்வரனை ஸ்துதிக்க வேண்டடிய பாசுரங்களைக் கொண்டு நீசர்கள் ‘பனியிருங் குழலாளன்’ ‘சுந்தரத் தோள் படைத்தான்’ என்றிப்படி புகழ்ந்து கவிபாடும்படி புன்மையான கவிகளை நெஞ்சிலே தரித்துக்கொண்டிருந்தேன் என்னுதல். முதற்சொன்ன பொருளின் கருத்து யாதெனில் – விபீஷணாழ்வான் ராவணனுக்கு ஹிதமான வார்த்தைகள் சொல்லச்செய்தேயும் அவன் அவற்றை மதியாமல் ‘த்வாம் துதிக் குலபாம்ஸநம்’ (இக்குலத்திற்கு இழுக்கான நீ ஒழிந்து போ) என்று திரஸ்கரித்து வார்த்தை சொல்ல, அதனால் நெஞ்சு புண்பட்ட விபீஷணன் ‘இனி நாம் இந்த பிராகிருதரோடு தான்; அப்படியே நானம் ஆபாஸபந்துக்களின் நீசபாஷணங்கள் செவியில் விழும்போதே அவர்களை வெறுத்தொழிந்து சடக்கென வந்து உன் திருவடிகளிலே விழ வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அது செய்யாதே நெடுநாள் வரையில் அந்த பிராகிருதர்களின் புன் சொற்களையெல்லாம் ஜுகுப்ஸையின்றி நெஞ்சிலே தாங்கிக் கொண்டிருந்தேனே! என்று பூர்வவ்ருத்தத்திற்கு அநுதாபப்படுகிறபடி.
ஐம்புலன்கட் கடனாயின பொருளின்பமென விரண்டு மிறுத்தேன் = தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று நால்வகைப்பட்ட புருஷார்த்தங்களில் தர்மத்தையும் மோக்ஷத்தையும் உபேக்ஷித்து அர்த்தகாமங்களை விரும்பி யொழிந்தேனென்கை. இவ்விரண்டும் பஞ்சேந்திரியங்களுக்குக் கடன் போலும்; கடன் பட்டால் எப்பது அது அவசியம் கொடுத்தே தீரத்தக்கதோ அப்படி இந்திரியங்களுக்கு அவசியம் விளைவிக்க வேண்டடியவை அர்த்தகாமங்கள் என்க. இறுத்தேன் – கடனைக்கொடுத்தே தொலைப்பாரைப்போலே அர்த்தகாமங்களை இந்திரியங்களுக்குச் செலுத்தினேனென்கை.
ஆர்வச்செற்றம் வாயிலொட்டி யறுத்தேன் = அநுகூலரிடத்தில் உண்டாகும் ப்ரேமம் ஆர்வமென்கிறது; பிரதிகூலர் பக்கலுண்டாகும் த்வேஷம் செற்ற மென்கிறது; அர்த்தகாமங்களை ஸாதிக்க முயற்சி செய்யும்போது அவற்றுக்குச் சிலர் அநுகூலராகவும் சிலர் பிரதிகூலராகவும் ஏற்படுவர்; அநுகூலரிடத்து ஆர்வமும் பிரதிகூலரிடத்துச் செற்றமும் உண்டாவது இயல்பு; அவை உண்டானவாரே அநுகூலரை நோக்கி ‘நான் என் உயிரையளித்தாகிலும் உமக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறேன்’ என்றும், பிரதிகூலரை நோக்கி ‘உன்னைக் கூண்டோடு கொலைசெய்து விடுகிறேன்’ என்றும் பிரதிஜ்ஞைகள் செய்வதும் வழக்கம்; அப்படியே நானும் பிரதிஜ்ஞை செய்து அதைக் காரியத்தாலும், தலைக்காட்டி விட்டேனென்கிறார். வாயில் – வாயினால் ஒட்டி – பிரதிஜ்ஞை செய்து, அறுத்தேன் – செய்தும் முடித்தேன். ஆக இவ்வளவும் தமது முன்னைய நிலைமைகளைச் சொல்லி, மேல் இப்போதைய ஆபிமுக்யத்தை அருளிச்செய்கிறார்’ அவைதன்னை மனத்தகற்றி வெறுத்தேன் நின்னடைந்தேன்’ என்று. ‘அவைதன்னை’ என்றது – முதலடியிற் சொன்ன பொருளின்பங்களை என்றாவது, மூன்றாமடியிற் சொன்ன ஆர்வச்செற்றங்களை யென்றாவது கொள்ளலாம். அர்த்தகாமங்களில் நசையொழிந்து, (அல்லது, ராகத்வேஷங்களைத் தவிர்ந்து) நின்னடைந்தேன் என்றாராயிற்று.
English Translation
O Lord residing in Tiruvinnagar! I bore many insults, while feeding my senses with material goods and physical pleasurs. I took a vow to get rid of love and hate, and purged my heart of these. Now I have come to you.
