(1466)
போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
போது ஆர் தாமரையாள் |
– |
நல்லபோதிலே அலர்ந்த தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான பிராட்டிக்கும் |
|
புலவி |
– |
பூமிப்பிராட்டிக்கும் |
|
குலம் வானவர்தம் |
– |
சிறந்த நித்யஸூரிகளுக்கும் |
|
கோதா |
– |
விரும்பத்தகுந்தவனே! |
|
கோது இல் செங்கோல் |
– |
தடையின்றிச் செங்கோல் செலுத்துமவராய் |
|
குடை |
– |
கொற்றக்குடையை யுடையரான |
|
மன்னர் இடை |
– |
(துரியோதநாதி) ராஜாக்களிடத்தில் |
|
நடந்த தூதா |
– |
தூது நடந்தவனே!, |
|
தூ மொழியாய் |
– |
இன்சொற்களை யுடையவனே! |
|
சுடர்போல் |
– |
விளக்கொளிபோலே (ஜ்வலித்துக்கொண்டு) |
|
என் மனத்து இருந்த |
– |
என்னுள்ளத்தில் உறைகின்ற |
|
வேதா |
– |
வேத வேத்யனே!- ; |
|
திரு விண்ணகர் மேயவனே!- ; |
||
|
நின் அடைந்தேன் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிராட்டிமாரும் நித்யஸூரிகளும் புருஷகாரமாகச் சரணம்புகுகிறாரிதில். போதார் தாமரையாள் தன்கோதா!, புலவிதன்கோதா!, குலவானவர்தம் கோதா! என்று யோஜிக்கலாம். ‘கௌதுகம்’ என்னும் வடசொல் விகாரமடியாப் பிறந்த விளியாம் கோதா! என்பது. ‘ப்ரியனே’ என்றபடி. செவ்வித் தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு அன்பனே! பூமிப்பிராட்டிக்கு அன்பனே! நித்யஸூரிகட்கு அன்பனே! என்கை. பூமிப்பெயரான புலம் என்னும் சொல்லடியாயப் பிறந்த பெண்காற்பெயர் புலவி என்பது. அன்றியே, ‘புலவி’ என்று பிரிவுக்கும் பெயருண்டு; போதார் தாமரையாளுடைய புலவியில் – (பிராட்டியைப் பிரணயவசத்தால் பிரிந்திருக்குங் காலத்தில்) அப்பிரிவினாலுண்டான் ஊடலைத் தீர்த்துத்தேறுதல் செய்விக்கும் நித்யஸூரிகளுக்கு அன்பனே! என்னவுமாம்.
இப்படி நித்யஸூரிநாதனாயிருக்கச் செய்தேயும் ஆச்ரிதர்கட்காட்காகத் தன்னை யழியமாறித் தூது போனமைசொல்லுகிறத கோதில் செங்கோற் குடை மன்னரிடை நடந்தா தூதா! என்று. இங்கு ‘மன்னர்’ என்றது துரியோதனாதியரை யென்றுங் கொள்ளலாம், பாண்டவர்களை என்றும் கொள்ளலாம். பாண்டவர்களின் குடை சாமரம் முதலானவற்றையெல்லாம் பறித்துக்கொண்டு முத்துக்குடை நிழற்கீழேயிருந்து பூமிப்பரப்புக்கெல்லாம் தாங்கனே அரசர்களாய் நிர்வஹித்துக்கொண்டு போருகிற துரியோதனாதியரிடத்திலே கழுத்தில் ஓலையைக் கட்டிக்கொண்டு தூதெழுந்தருளினவனே! ; அன்றி, கண்ணபிரானுடைய திருவுள்ளத்திலே கோதில்செங்கோற் குடை மன்னரான பாண்டவர்கட்காகத் தூதெழுந்தளினவனே! என்றுமாம்.
தூமொழியாய்! = ஆச்ரிதர்களான பாண்டவர்களிடத்தில் தனக்குண்டான பக்ஷபாதம் விளங்க வார்த்தையருளிச் செய்தவனே! என்றவாறு. அதாவது என்னென்னில்; பாண்டவர்களும் நீங்களும் செய்யப்பார்த்தது என்? என்று துரியோதனாதியரைக்கேட்க, அதற்குத் துரியோதனன் ‘பாண்டவர்களுக்குத் தருமமும் தருமபலனான ஸ்வர்க்கபோகமுமுண்டு; அவர்கள் ஐந்துபேர்; நாங்கள் நூறுபேர்; ஆகையாலே பூமிப்பரப்பெல்லாம் எங்களுக்கே இடம்போருமித்தனை, நங்கள் ஒரு ஊசிகுத்துமிடமும் கொடுப்பதில்லை’ என்று சொல்ல, ‘உன் எண்ணம் இதுவான பின்பு இனி யுத்தம் நடத்துமித்தனன’ என்று அருளிச்செய்த மொழியாம். இது ஆச்ரிதரான பாண்டவர்களிடத்துப் பரிவுதோற்ற அருளிச்செய்த வார்த்தையாகையாலே தூமொழியாம்.
சுடர்போல் என் மனத்திருந்த வேதா! = ‘இப்படிப்பட்ட ஆச்ரிதபக்ஷாதி யன்றோ இவன்’ என்று என் மனம் உன்மேல் ஈடுபட்டிருக்கு மென்றவாறு.
வேதா! நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே! = உன்னை வேதங்களிலே கேட்டுப்போகயல்லாமல் கண்ணாலே காணலாம்படி திருவிண்ணகரிலே வந்து ஸந்நிதிபண்ணியிருக்கு மிருப்பிலே வந்து சரணம்புகுந்தேனென்றாராயிற்று
English Translation
O Lord reisiding in Tiruvinnagar! O Lord, sweet as ambrosia to lotus-dame Lakshmi, Earth Dame and devotees in the sky! O Soft spoken one, you walked as a messenger between crowned parasoled kings! You are the radiant lamp of knowledge in my heart. I have come to your feet.
