(1467)

(1467)

தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை,

வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார்

ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார்,

கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே.

 

பதவுரை

தேன் ஆர் பூ புறவின்

தேன்நிறைந்த பூக்களை யுடைய சோலைகள் யுடைத்தான

திரு விண்ணகர்

திருவிண்ணகர்த் திருப்பதியிலே

மேயவனை

நித்யவாஸஞ்செய்தருளு மெம்பெருமான் விஷயமாக,

வான் ஆரும் மதிள் வயல் சூழ் மங்கையர் கோன்

ஆகாசத்தையளாவியிருக்கிற மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியாய்,

மருவார்

பகைவருடைய

ஊன் ஆர்

சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான

கலியன்

ஆழ்வார்

ஒலிசெய்

அருளிச்செய்த

தமிழ் மாலை

இத் தமிழ்ப்பாசுரங்களை

வல்லார்

ஓதவல்லவர்கள்

கோன் ஆய்

ஸ்ரீவைகுண்ட நிர்வாஹகராய்க் கொண்டு

வானவர் தம் கொடி மா நகர்

நித்யஸூரிகளுடைய கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட சிறந்ததான ஸ்ரீவைகுண்டத்தை

கூடுவர்

அடையப்பெறுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழிகற்றார்க்குப் பயனரைத்துத் தலைக்கட்டினாராயி்ற்று.  இங்குநின்றும் பரமபதத்துக்கு எழுந்தருளுமவர்களை அங்குள்ள நித்யஸூரிகள் “ஆண்மின்கள் வாகனம் ஆழியான தமரென்று“ என்கிறபடியே ‘நீங்கள் பரமபதத்தை ஆளுங்கோள்‘  என்பாராதலால் ‘கோனாய்‘ எனப்பட்டது.  இத்திருமொழிகற்றா ரிட்டவழக்காயிருக்குமாம் திருநாடு.

 

English Translation

The high-walled-fertile-Mangal King.  Spear-wielder Kaliyan, has sung this garland of Tamil songs for the Lord residing in the nectored groves of Tiruvinnagar.  Those who master it will enter the festooned city of the celestials as kings.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top