(1451)
நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுரு வினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்
, வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே
பதவுரை
|
ஒரு கால் |
– |
(பிரளயமாகிற) ஒரு ஸமயத்தில், |
|
நிலவொடு வெய்யில் நிலவு இரு சுடரும் |
– |
நிலாவோடும் வெய்யிலோடும் கூடி ஸஞ்சரிக்கிற சந்திரஸூர்யர்களையும் |
|
உலகமும் |
– |
உலகங்களையும் |
|
உயிர்களும் |
– |
(அங்குள்ள) பிராணிகளையும் |
|
உண்டு |
– |
திருவயிற்றிலே வைத்து நோக்கி |
|
கலைதரு |
– |
மிகச்சிறிய வடிவுகொண்ட |
|
குழவியின் உருவினை ஆய் |
– |
குழந்தை ரூபியாய்க் கொண்டு |
|
அலை கடல் |
– |
அலையெறிகின்ற கடலினிடையே |
|
ஆல் இலை |
– |
ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனே! |
|
ஆண்டாய் * * * வேண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கலைகருகுழவி ‘கலா’ என்னும் வடசொல் ‘பதினாறில் ஒரு பங்கு’ என்று பொருள்படும் முகத்தால் மிகச் சிறுமையை உணர்த்திற்றாகும்; இளங்குழந்தை என்றபடி. இனி, உலகத்திலுள்ள குழந்தைகள் போலன்றியே அறிவுமிக்க குழந்தை என்னவுமாம்; அப்போது சாஸ்த்ரமென்னும் பொருளதான ‘கலா’ சப்தம் இலக்கணையால் அறிவுக்கு வாசகமாகும்
English Translation
Swallowing the Earth and the sun and Moon, living and the non-living, all in a trice, you came as an innocent child in the ocean, floating on a fig leaf in yore in the past, O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!
