(1457)

(1457)

பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,

காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,

பாமரு தமிழிவை பாடவல்லார்,

வாமனன் அடியிணை மருவுவரே.

 

பதவுரை

பூமரு

(எப்போதும்) பூக்கள் பொருந்தி இருக்கப்பெற்ற

பொழில்

சோலைகளாலே

அணி

அலங்கரிக்கப்பட்ட

விண்ணகர் மேல்

திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமாக,

காமரு சீர் கலிகன்றி சொன்ன

விரும்பத்தக்க ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷமியை யுடையரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பா மரு தமிழ் இவை

தமிழ் பாசுரங்கள் நிறைந்த இத்திருப்பதிகத்தை

பாட வல்லார்

ஓத வல்லவர்கள்

வாமனன்

ஸர்வேச்வரனுடைய

அடி இணை

உபய பாதங்களை

மருவுவர்

பொருந்தப் பெறுவர்.

 

English Translation

These Tamil songs giving sweetness to heart, on fragrant groves all around Vinnagar town, by Kalikanri adorable poet, -those who can master will see the holy feet, O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top