(1317)
நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.
பதவுரை
|
நுல் அன்பு உடைவேதியர் மன்னிய நாங்கூர் |
– |
சிறந்த பக்தியையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில் |
|
திருவெள்ளக் குளத்து உறைவான் செல்வனை |
– |
திருவெள்ளக்குள மென்னுந்திருப்பதியிலே எழுந்தருளியிருக்கிற திருமால் விஷயமாக, |
|
கல்லின் |
– |
மலையைக் காட்டிலும் |
|
மலி |
– |
அதிசயித்த வலிவுள்ள |
|
தோள் |
– |
புஜங்களை யுடையரான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
சொன்ன |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
இச் சொல்மாலையை |
|
வல்லர் என வல்லவர் தாம் |
– |
‘இவர்கள் ஸமர்த்தர்கள்’ என்று (அனைவரும்) சொல்லும்படியாக ஓதவல்லவர்கள் |
|
வானவர் |
– |
நித்யஸூரிகளோடு சோப்பெறுவர். |
|
வல்லரென வல்லவர் |
– |
இவர் பெரிய திருமொழிப் புலவர்’ என்று பிறர் கொண்டாடும்படியாகக் கற்குமவர்கள் என்கை. |
English Translation
This strong-as-the-mountain kalikanri’s song garland, On godly-benevolent-Vedic-Seers wealth, Resident of Nangur’s Tiruvellakulam, -Those who master it will live as celestials.
