(1299)
மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
பதவுரை
|
எனம் ஆகி மண் இடந்து |
– |
ஆதிவராஹமாகி (அண்டபித்தியில் அழுந்திக்கிடந்த) பூமியைப் பிரித்துக் கொணர்ந்தவனாயும் |
|
மாவலி வலி தொலைப்பான் |
– |
மஹாபலியினுடைய மிடுக்கைப்போக்குமாறு |
|
விண்ணவர் வேண்ட |
– |
தேவர்கள் யாசிக்க (அதற்கிணங்கி) |
|
வேள்வியில் சென்று |
– |
(அந்த மாவலியின்) யாக பூமியில் எழுந்தருளி |
|
குறை இரந்தாய் |
– |
தனக்கு வேண்டியதை யாசித்துப் பெற்றவனே!, |
|
மாற்றார் தம்மை துண்ணென தொலைத்தவர் நாங்கை மேய |
– |
பகைவர்களைச் சீக்கிரமாக வென்று ஒழித்தவர்கள் வாழ்கிற திருநாங்கூரில் பொருந்தியிருக்கிற |
|
சாவளந்தண்பாடியாய்! கண்ணனெ! |
||
|
நீயே களைகண். |
||
English Translation
O, Krishna! You came as a boar and lifted the Earth. You went to Mabali’s sacrifice and begged, then subdued him to favour the gods. You reside with easy-winner-seers in Nanguru’s kavalampadi. You are my sole refuge!
