(1277)
தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே.
பதவுரை
|
தேன் அமர் சோலை |
– |
வண்டுகள் படிந்த சோலைகளையுடைய |
|
நாங்கை |
– |
திருநாங்கூரில் |
|
நல் நடுவுன் |
– |
நட்ட நடுவில் |
|
செம்பொன்செய் கோயிலின் உள்ளே |
– |
செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே |
|
வானவர் கோனை |
– |
தேவாதிதேவனை |
|
கண்டமை |
– |
தாம் ஸேவித்தபடியை |
|
சொல்லும் |
– |
அருளிச்செய்தவரும் |
|
மங்கையார் |
– |
திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும் |
|
வாள் |
– |
வாட்படையை யுடையவருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வாருடைய, |
|
ஊனம் இல் பாடல் |
– |
குறையொன்றுமில்லாத பாசுரமான |
|
ஓன்பதோடு ஒன்றும் |
– |
இப்பத்துப்பாட்டுகளையும் |
|
ஒழிவு இன்றி |
– |
ஒன்றும் விடாமல்; |
|
கற்று வல்லார்கள் |
– |
ஓதி யுணரவல்லவர்கள் |
|
மானம் |
– |
பரப்பையுடைய |
|
வெண் குடை கீழ் |
– |
வெண்கொற்றக் குடையின் கீழ் (இருந்துகொண்டு) |
|
வையகம் |
– |
பூ மண்டலத்தை |
|
ஆண்டு |
– |
அரசாண்டு |
|
மகிழ்ந்து |
– |
உவந்து |
|
வானவர் ஆகுவர் |
– |
(பிறகு) நித்யஸூரிகளுமாவர் |
English Translation
Groves dripping nectar, Nangur-surrounding, -semponsei koyil in their midst; Lord of celestials, sung in the songs of king of Mangai Kalikanri. Those who tan master this prefect garland of beautiful Pann based Tamil songs; will get the rule of under-parasol, then become gods in the sky as well.
