(1273)
மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
பதவுரை
|
மல்லை மாமுந்நீர் அதர்பட |
– |
செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி |
|
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை |
– |
மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும், |
|
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க |
– |
(த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி |
|
ஓர் வாளி தொட்டனை |
– |
ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை |
|
செல்வம் நால்மறையோர் |
– |
சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற |
|
நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே; |
||
|
அல்லி மாமலராள் தன்னொடும் |
– |
பிராட்டியோடு கூட |
|
அடியேன் கண்டுகொண்டு |
– |
அடியேன் ஸேவித்து |
|
அல்லல் தீர்ந்தேன் |
– |
துன்பங்கள் தொலையப் பெற்றேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கடல் ரத்னங்களுக்குப் பிறப்பிடமாதலால் ‘மல்லைமா முந்நீர்’ எனப்பட்டது. த்ரி கூடமென்னும் மலையின் சிகரத்திலே இலங்கைமாநகர் இயற்றப்பட்டதாதலால் ‘கல்லின் மீதியன்ற’ எனப்பட்டது. கல் – மலைக்கு ஆகுபெயர். கடி – அரண்.
English Translation
Building a bridge of rocks over foaming sea in the yore, fifty Lord who found his joy shot heavy arrows over the mighty walled city of the island-king Lanka. Learning-wealthy Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, seeing my precious Lord, with the lotus-Lakshmi, I have found my spiritual elevation.
