(1271)
வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
பதவுரை
|
வசை அறு குறள் ஆய் |
– |
குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு |
|
மாவலி வேள்வியில் |
– |
மஹாபலியினுடைய யாக பூமியில் |
|
மண் அளவிட்டவன் தன்னை |
– |
உலகளந்தவனும், |
|
அசைவு அறும் அமரர் |
– |
சலிப்பில்லாத நித்யஸூரிகள் |
|
அடி இணை |
– |
உபயபாதங்களை |
|
வணங்க |
– |
ஆச்ரயிக்கும்படியாக |
|
அலை கடல் துயின்ற அம்மானை |
– |
அலையெறிகின்ற திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருப்பவனும், |
|
உயர் மணி மகுடம் சூடி நின்றானை |
– |
உயர்ந்த ரத்ன கிரீடத்தை அணிந்துகொண்டிருப்பவனுமான பெருமானை |
|
திசைமுகன் அனையோர் |
– |
பிரமனைப்போன்ற அந்தணர்கள் வாழ்கிற |
|
நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் |
||
English Translation
Going as a manikin to the Bali-sacrifice he took the Earth in two big steps, Gods in the sky above offer him worship in his deep-ocean cool resort, Brahma-like Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, Seeing the good Lord, wearing a tall crown I have found my spiritual elevation.
