(1270)
திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி
மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
பதவுரை
|
திடம் |
– |
திடமான |
|
விசும்பு எரி நீர் |
– |
ஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும் |
|
திங்களும் |
– |
சந்திரனும் |
|
சுடரும் |
– |
ஸூர்யனும் |
|
செழு நிலத்து பிராணிகளும் |
– |
வளம்மிக்க பூமியிலுள்ள பிராணிகளும் |
|
மற்றும் படர் பொருள்களும் |
– |
மற்றும் பலவகைப்பட்ட பதார்த்தங்களும் (ஆகிய இவற்றுக்கு) |
|
ஆய் நின்றவன் தன்னை |
– |
அந்தர்யாமியா யிருப்பவனும் |
|
கடல் நிறம் வண்ணன் தன்னை |
– |
கடலின் நிறம் போன்ற திருமேனியை யுடையனுமான பெருமானை |
|
பங்கயத்து அயன் அவன் அனைய |
– |
தாமரையிற் பிறந்த பிரமனைப் போன்றவர்களாய் |
|
திடம் மொழி மறையோர் |
– |
திடமான வாக்கையுடையவர்களான அந்தணர்கள் வாழ்கிற |
|
நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் |
||
|
கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருநாங்கூரிலுள்ள அந்தணர்கள் பிரமனைப் போன்றவர்களென்ற – எப்போதும் வேதாத்யயந சீலர்களால் ஆசாரபார்களாயிருக்கையை நோக்கியாம். பிரமனைப்போலே ஜகத்ஸ் ருஷ்டி பண்ணவும் வல்ல ரென்னவுமாம். திடமொழி மறையோர் – சொன்னசொல் தவறாத ஸத்யசீலர்.
English Translation
Sky, Fire, water, Moon and the Sun too, Earth and the beings-living all, -He who is all these and other things too, lives in the midst of Brahma-like Firm-of-speech-Vedic-Seers residing in Nangur, -Semponsei Koyil is in their midst, -seening my lady-lord, dark as the ocean, I have found my spiritual elevation.
