(1252)

(1252)

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்

உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,

தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,

திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

அண்டமும்

ஆகாசமும்

அலை இக்கடலும்

அலையெறிகின்ற இக்கடல்களும்

அவனிகளும்

(நாவலந்தீவு முதலிய) தீவுகளும்

குலம் வரையும்

(ஹிமவான் முதலிய) குலபர்வதங்களும் ஆகிய இவற்றையெல்லாம்

உண்ட

(பிரளயகாலத்தில்) திரு வயிற்றில்கொண்ட

பிரான்

உபகாரகனான எம்பெருமான்

உறையும் இடம்

வாழுமிடம் (எதுவென்றால்)

ஒளி

ஒளிபொருந்திய

மணி

ரத்நங்களையும்

சந்து

சந்தன மரங்களையும்

அகில்

அகில் கட்டைகளையும்

கனகம்

பொன்களையும்

தெண் திரைகள் வர

தெளிந்த அலைகளின் வழியே வரும்படியாக

திரட்டும்

ராசி ராசியாகக் குவிக்கின்ற

திகழ்மண்ணி தென் கரைமேல் –;

திண் திறாலர்

மிக்க பலசாலிகள்

பயில்

நித்யவாஸம் பண்ணுகிற

நாங்கை

திருநாங்கூரிலுள்ளதான

திருத்தேவனார் தொகை-.

 

English Translation

The Lord who swallowed the Universe, –the oceans, the continents, the mountains and all else, –resides at Nangur on the Southern  banks  of the river Manni, which  washes bright gems, gold, fragrant Sandal and Agil wood, amid well versed Vedic seers in Tiruttevanar Togai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top