(1237)
சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண் நெடியபிரான் தானமரும் கோயில்,
வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,
மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள் தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.
பதவுரை
|
சங்கு மலி தண்டு சக்கரம் முதல் முன் வந்தும் |
– |
ஸ்ரீ பாஞ்சஜந்யமும் பொருந்திய கௌமோதகியும் ஸூதர்சநமும் முதலான திவ்யா யுதங்களை கண் முன்னே தரித்துக் கொண்டிருக்கிற |
|
நெடிய தாமரை கண் பிரான் தான் |
– |
நீண்ட தாமரை போன்ற திருக்கண்களையுடைய ஸர்வேச்வரன் |
|
அமரும் கோயில் |
– |
நித்யவாஸம் பண்ணுகிய ஸந் நிதியாய் |
|
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்து நாங்கூர் |
– |
கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் பிரஸித்திபெற்ற திருநாங்கூரிலுள்ளதான் |
|
வைகுந்த விண்ணகர்மேல் |
– |
வைகுந்த விண்ணகரத் திருபதி விஷயமாக |
|
வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்த்தம் தலைவன் |
– |
வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற சோலைகளினால் சூழப்பட்ட திருமங்களை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் |
|
மருவலர்தம் உடல் துணியவாள் வீசும்பரகாலன் கலிகன்றி சொன்ன |
– |
பகைவருடைய சரீரங்கள் தொலையும்படி வாட்படையை வீசுகின்றவரும் பரகாலனென்னுந் திருநாமமுடையவருமான திருமங்கையாழ் வார் அருளிச் செய்த |
|
சங்கம் மலி தமிழ் மாலை இவை பத்து வல்லார்கள் |
– |
சங்கப்புலவர்கள் கொண்டாடத்தக்க தமிழ்மாலையாகிய இப்பத்துப் பரசுரங்களையும் ஓதவல்லவர்கள் |
|
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவார் |
– |
பூமியையும் பரமபதத்தையும் ஆளும்படியான அதிசஙத்தைப் பெறுவார்கள். |
English Translation
This garland of sweet Tamil songs by Mangai King Parakalan, terrible sword wielder Kalikanri sings of the ancient Lord of conch, discus and bow, with lotus eyes, who is the permanent resident of Nangur’s Vaikunta Vinnagaram. Those who master it will have the power to rule over Earth and Heaven.
