(1230)

(1230)

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும்,

முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும் முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய

வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.


பதவுரை

அண்டமும் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திருவயிற்றின்

அண்டங்களும் இந்த அலையெறிகின்ற கடல்களும் பூமிகளும் ஆகிய எல்லாவற்றையும் (பிரளய காலத்தில்) உட்கொண்ட திருவயிற்றையுடையவனும்

அரன் கொண்டு திரியும் முண்டம் அது நிறைந்தது

ருத்ரன் தன் கையில் ஏற்றுக் கொண்ட திரிந்த தலையோட்டை நிறையச் செய்து

அவன்கண் சாபம் அது நீக்கும்

அவனிடத்து நேர்ந்திருந்த பிரமஹக்கி சாபத்தைப் போக்கினவனுமான

முதல்வன் அவன்

ஜகத்காரண பூதனுன ஸவேச்வரன்

எண் திசையும் பெரு செல்வம் பெரு செந்நெல் இள தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு

அழகிய குலைகளையுடைய பாக்கு மரங்களும் ஒன்றுக்கொன்று மிகைத்துக் கொண்டு

வளம் சொரிய

சேழித்து வளரபடிபற்றதும் வண்டுகள் பலவகையான ராகங்களைப் பாடப்

வண்டு பல இசை பாட

வண்டகள் பலவகையான ராகங்களைப் பாடப் பெற்றதும்

மயில் ஆலும் நாங்கூர்

மயில்கள் ஆடப்பெற்றதுமான திருநாகூரில்

மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்

வைகுந்த * * * வணங்கு

 

English Translation

Then in the yore the Lord swallowed the Universe in one gulp, –and with in the oceans, the continents and all else, –then rid Brahma’s-skull-for-a-begging-bowl-Siva of his eternal curse. He resides permanently in Nangur where paddy fields, tender-coconut trees, banana plantation, and Betel creepers vying with Areca trees grow in abundance, while bees sing and peacocks dance everywhere. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top