(1216)
காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள்,
பாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து,
தூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய்,
வாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.
பதவுரை
|
ரவி அம் கண்ணி |
– |
நீலோற்பலமலர்போன்று அழகிய கண்களையுடையவளும், |
|
யெண்ணில் கடி மா மலர்பாவை ஒப்பாள் |
– |
ஆலோசிக்குமிடத்தில், பெரிய பிராட்டியாரோடு ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும் |
|
தாவிசேர்அன்னம் அன்னத் நடையாள் |
– |
இறகையுடைய அன்னப்பேடையின் நடைபோன்ற நடையையுடையவளும் |
|
ஈடு பணை தோளி |
– |
மூங்கில் போன்ற தோள்களையவளுமான என் மகள் |
|
பாவியேன் பெற்றமையால் |
– |
பாவியான என்னுடையவயிற்றிற் பிறந்த குற்றத்தினால் |
|
பரக்கழிந்து |
– |
பெரும்பழிக்கு இலக்காகி |
|
நெடுமாலொடும் போய் |
– |
ஸர்வேச்வரனோடு கூடச் சென்று |
|
(இருவரும்) |
||
|
வாவி |
– |
நடைவாவிகளும் |
|
அம் தண் பணை |
– |
அழகிய குளிர்ந்த தடாகங்களும் |
|
சூழ் |
– |
சூழ்ந்த |
|
வயல் ஆலி புகுவர்கொலோ-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்மகளை என்மகளாக நினைத்திரேன்மின்; ஸாக்ஷாத் பெரிய பிராட்டியாரோடு ஒத்தவளாக நினைத்திருங்கள் என்கிறாள். முதலடியால். “பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்” (3280) என்பது நம்மாழ்வார்திருத்தாய் பாசுரம்; இத்திருத்தாய் “கடிமாமலர்ப் பாவை யொப்பாள்” என்கிறாள்; கந்தல் கழிந்தால் ஸர்வர்க்கும் நாரிணா முத்தமையுடைய அவஸ்தைவரக் கடவரக் கடவதாயிருக்கும்” என்பது ஸ்ரீவசநபூஷணம்: வந்தேறியான அஜ்ஞாநம் முதலிய தோஷங்கள் என்பது இதன் கருத்து. எம்பெருமானொருவனுக்கே உரிமைப்பட்டிருக்கை, அவனொருவனையே சரணமாகப் பற்றியிருக்கை, அவனொருவனை யே போக்யமாகக் கொண்டிருக்கை, அவனொருவனாலேயே தான் நிர்வஹிக்கத் தகுந்திருக்கை, ஸம்ச்லேஷத்தில் அறியிருக்கை, விச்லேஷத்தில் ஆறியிராமை என்னுமிவ்வாறு படிகளாலே அவித்யாதி தோஷங்கள் மிச்சமின்றிக் கழிந்து பரிசுத்தமாகப்பெற்ற ஆதமஸ்வரூபத்துக்கு இந்த ஆறுபடிகளாலும் நிறைந்துள்ள பிராட்டியோடு ஸாம்யம் இயற்கையாகவே உண்டாயிருக்குமன்றோ.
பாவியேன் பெற்றமையால் = இவள் திருப்பாற் கடலிலாவது தாமரை மலரிலாவது பிறந்திருப்பாளாகில் அவன் திருமார்பை விட்டுப் பிரியாதே இருந்திருக்கக்கூடும்; அங்ஙன்றியே பாவியேனான என்வயிற்றிலே வந்து பிறந்தனளாதலால் “தந்தையுங்தாயு முற்றாரும் நிறகத் தனிவழி போயினாள்” (619) என்று நால்வர் வாயிலே பழிச்சொல் புறப்படும்படியாகப் போக நேர்ந்தது இவளுக்கு என்கிறாள்.
இப்படி, ஸீதாபிராட்டி சக்ரவர்த்தி திருமகனாருடனே சென்றதுபோலே இருவராய்ச் சென்ற விவர்கள் திருவாலித் திருப்பதியினுள்ளே சென்று சேர்ந்திருப்பர்களோ, அல்லது ஊர்ப்புறத்தே வாவித்தடங்களிலே ரமித்து மயங்கிக் கிடப்பர்களோ வென்கிறது பின்னடிகளில்.
English Translation
Come to think, my lotus-eyed girl was verify the lotus-dame Lakshmi herself. Because of this sinful self, the Bamboo-slender-arms-one lost control of herself. Walking with the grace of the flighty swan, she left with her long-time lover. Would they have entered the cool lake-surrounded by fields of Tiruvali? O, Alas!
