(1210)

(1210)

அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய் அரக்கர்க்குலப் பாவைதன்னை,

வெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில்,மெய்யே

பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து,

வஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.

 

பதவுரை

வெம் சொல் நங்காய்

விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே!

அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு

ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை

வெம் சினம்

கடுங்கோபத்தாலே

அரிந்த

அறுத்தொழித்த

விறலோன்

மிடுக்கையுடையனான அந்த யௌவந  புருஷனுடைய

திறம்

தன்மையை

கேட்கில்

கேள்விப்படுமளவில்

மெய்யே அஞ்சுவன்

உண்மையாக அஞ்சுகிறேன்!

பஞ்சிய மெல் அடி

பஞ்சுபோன்ற மிருதுவான அடியையுடையவனும்

எம் பணை தோளி

மூங்கில்போன்ற தோள்களை யுடையவளுமான என் மகள்

பாக்க்க்கழிந்து

பெரும்பழிக்கு இடமாகி (அவனோடு செல்ல, அவ்விருவரும்)

வஞ்சி அம் தண் பணை சூழ்

வஞ்சிக் கொடிகளாலழகிய குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த

வயல்

கழனிகளையுடைய

ஆலி

திருவாலியிலே

புகுவர் கொலோ

சென்று சேர்ந்திருப்பர்களோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வினவவந்த மற்றொரு தோழியை நோக்கிச் சொல்லுகிறார் தாய். “அரக்கர் குலப்பாவை தன்னை முக்கரிந்த விறலோன் திறங்கேட்கில் மெய்யே அஞ்சுவன்“ –தண்டகாரணியத்திலே இராமபிரான் வஸிக்கும் போது இராவணனது தங்கையான சூர்ப்பணகை அப்பெருமானைக்கண்டு காதல்கொண்டு தனது ராக்ஷஸூருபத்தை மறைத்து அழகிய பெண்ணின் வடிவுகொண்டுவந்து ‘என்னை அங்கீகரிக்கவேணும்‘ என்று ஸ்ரீராமனைப் பிரார்த்திக்க, அப்பிரான் ‘எனக்கு இதோ ஒரு ஸ்த்ரீ இருக்கிறாள், ஆதலால் அங்கே போ‘ என்று இளையபெருமாளைக் காட்ட, அவனும் ‘நான் ஸ்ரீராமனுக்கு அடிமை, என்னை மணந்துகொண்டால் நீயும் வேலைக்காரியாக வேண்டிவரும், ஆகையாலே அவர்பக்கலிலேயே போவாய்‘ என்ன, இப்படி இருவரும் தன்னை அவமதிக்கையாலே அச்சூர்ப்பணகை மிக்க சினங்கொண்டுபோக தனது உண்மையான வடிவுடனே வந்து ஸீதாபிராட்டியை எடுத்துக்கொண்டுபோக யத்நிக்க, அப்போது இராமபிரான் ஸ்த்ரீயென்று அவளை கொல்லாம் விட்டு இலக்குமணனைக்கொண்டு அவளது செவி மூக்கு முதலிய அங்கங்களையறுத்து மானபங்கஞ்செய்து போகவிட்டன்னென்பது வரலாறு. இதனை இவ்விடத்தில் (ப்ரகாலஜநநி) எடுத்துரைத்து, “இப்படிப்பட்ட தன்மையைக் கேட்க நான் அஞ்சுகின்றேன்“ என்று சொல்லியிருப்பதன் கருத்து யாது? அரக்கியில் மூக்கை யறுத்ததுபோலே என் மகளின் மூக்கையும் அறுத்துவிடுவனோவென்று அஞ்சுகின்றேனென்பதாகவன்றோ மேலெழ நோக்குமிடத்துக் கருத்துத் தோன்றாநின்றது. குணக்கடலாகிய எம்பெருமான் விஷயத்திலே இவ்வாறு நினைத்து அஞ்சுதல் கூடுமோ? இது குணஹாநி சொல்லுகிறப்படியாகுமன்றோ? என்று பூருவர்கள் விசாரஞ் செய்யுமிடத்து, கிடாம்பியாச்சான் ‘துடுப்பு இருக்க்க்கை வேகவேணுமோ? எம்பெருமான் இனிதாக நிர்வயித்துப் பொருளருளிச் செய்து வைத்திருந்த நாம் ஏன் வருந்தவேண்டும்? என்று சொல்லி அப்பெருமானையும் வெளியிட்டார், அதாவது – அரக்கர் குலப்பவை தன்னை மூக்கரிந்த விறலோன் என்றதனால், பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சேர்ந்த பிரிவு தெரிவிக்கப்படுகிறது. இராவணன் ஸீதையைக் கவர்ண்நது சென்றதற்கு மூலகாரணம் சூர்ப்பணகையின் அங்கபங்கமெல்லாம் பிரிவுதான் நினைவுக்கு வரக் கூடியது. ஆகவே, முன்பு இருவருமாய்ப் புறப்பட்டுச் சென்று ஒருவரையொருவர் பிரிந்து பலநரன் வருந்திக்கிடக்க நேர்ந்த்தே!, அவ்விதமாக இப்போதும் இவர்களுக்கு ஏதேனும் விதிவசத்தாலே பிரிவு நேர்ந்து பரிதபிக்க ப்ராப்தமாகுமோவென்று அஞ்சுகிறேன் –என்பதாம்.

“மூக்கரிந்த விறலோன்“ என்று பெருமாளை எப்படி சொல்ல்லாம்? மூக்கரிந்த செயல் இளையபெருமாளதன்றோவெனில், ஆயினும் இதனைப் பெருமாள் செயலாகவே கூறுதலுமுண்டு. “சூர்ப்பணகாவைச் செவியொடுமூக்கு, அவளார்க்க அரிந்தானைப் பாடிப்பற“ என்றார்பெரியாழ்வாரும். வால்மீகி முனிவர் இளையபெருமாளைச் சொல்லுமிடத்து “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு“ என்றார், அதாவது லக்ஷ்மணனை ஸ்ரீராமனது வலக்கையாக்க் கூறினர், ஆதலால் சூர்ப்பணகாபங்கத்தைப் பெருமானது செயலாக்க் கூறுவது பொருந்துமென்க. தன்கையாலேயன்றோ தண்டித்தது. இராமபிரான் ஏவுதற் கருத்தாவாதலாலும் பொருந்தும்.

வெஞ்சொல் நங்காய் – ‘வெஞசொல்‘ என்பதை நங்கைக்கு விசேஷண மாக்கியுரைக்கலாம். வெம்மை –விருப்பத்துக்கும் பேராகையாலே, மநோஹாமான பேச்சைப் பேசுகின்ற பெண்ணே! என்றவாறு. அன்றியே, ‘வெஞ்சொல்‘ என்பதைத் தனிச்சொல்லாகப் பிரித்து, ‘இதுவெவ்விய சொல்லாக இருக்கின்றது‘ என்றுரைப்பாருமுளர்.

பஞ்சிய – ‘பஞ்சு‘ என்பது பெயர்ச்சொல்லாயினும் அதை வினைப்பகுதி வடிவமாக்க் கொண்டு அதன்மேல் விகுதியேற்றிப் ‘பஞ்சிய‘ எனப்பட்டது. ‘கடைக்கணித்தான்‘ இத்யாதிப் பிரயோகங்கள் காண்க. செம்பஞ்சுச்சாறு ஊட்டப்பெற்ற மெல்லடி என்றுரைப்பாருமுளர்.

பாக்கழிந்து – ‘பரக்கு அழிந்து‘ என்று பிரித்து, ‘பரக்கு‘ என்பதற்கு அடக்கமென்று பொருள்கூறி, ‘அடக்கங்கெட்டு‘ என்றுரைப்பர் சிலர். அது நிற்க, கம்பராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்து வாலிவதைப் படலத்தில் (79) “அரக்கரோரழிவு செய்து கழிவரேலதற்கு வேறோர், குரக்கினத்தாசைக் கொல்ல மனுநெறி வுறிற்றுண்டோ?, இரக்மெங்குகுத்தாயென்பால் எப்பிழை கண்டாயப்பா, பரக்கழி யிது நீபூணடாற் புகழையார் பரிக்ற்பாலால்?“ என்ற செய்யுளில் ‘பரக்கழி‘ என்னும் பத்த்தின் பிரயோகம் காண்கிறது. அவ்விடத்து உரையில், “பரக்கழி – பெருநிந்தை, பெருந்தீங்குமாம்“ என்றிருக்க்க் காண்கிறோம். ஆகவே, இங்கே ‘பரக்கழிந்து‘ என்பதற்கு ‘பெரும்பழி விளையப் பெற்று‘ என்று பொருள்கொள்ளுதல் பொருந்தும். நாச்சியார் திருமொழியில் (1-2-3) “கொந்தனமாக்கிப் பரக்கழித்துக் குறும்புவு செய்வானோர் மகனைப்பெற்ற“ என்றவிடத்தில், “பரக்கழிக்கை – பழிவிளைக்கை“ என்பது வியாக்கியானம்.

பணை – ‘பண்ணை‘ என்பதன் தொகுத்தல், தடாகம். ‘பணை‘ என்றே கொண்டு, மூங்கிற்புதர் என்னவுமாம்.

 

English Translation

O Ladies! It is terrible. The Rakshasas clan’s precious dame lost her nose to the fury of the dark one. My body trembles in fear to hear about his might. My cotton-soft-feet-girl with Bamboo-like slender arms lost herself to him. Would they have entered the fertile Tiruvali surrounded by bowers with creepers and bamboo tickets? O, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top