(1184)

(1184)

பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,

செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன் திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த்

தெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி

தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

 

பதவுரை

பொருவு இல் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும் பத்தும் புற்று மறிந்தன போல புவிமேல சிந்த

ஒப்பற்ற வலிமையைக் கொண்டுள்ள இராவணனுடைய பத்துத் தலைகளும் புற்று சரியுமாபோலே (எளிதாகக்) கீழே இற்று விழும்படியாக

செருவில் வலம்புரி சிலை கைமலை தோள்வேந்தன்

யுத்தத்தில் வலிமை காட்டுகிற வில்லை திருக்கையிலேயுடைய மலை போன்ற தோள்களையுடைய சக்ரவர்த்தி திருமகனது

திரு அடி சேர்ந்து உய்கிற்பீர்

திருவடிகளையடைந்து வாழ விரும்புமன்பர்களே!

வலம்புரி

சங்குகளானவை

திரை எள்கி நீத்து மருவி

ஸமுத்ரத்தை இகழ்ந்து விட்டு நீங்கி (கடலில் நின்றும் வந்து ) (சீர்காழியிலே) வந்து சேர்ந்து

கைதை கழியூடு ஆடி

தாழைகள் நிறைந்த கழயினுள்ளே திரிந்து

(பிறகு அங்கு நின்றும் )

வயல் நண்ணி

கழனிகளைச் சென்று சேர்ந்து

( பிறகு அங்கு நின்றும் )

மழை தருநீர்தவழ் கால்

மழைநீர்வெள்ளம் பெருகி வருகிற வாய்க்கால்கள் மூலமாக

தெருவில் மன்னி

வீதிகளிலே வந்து சேர்ந்து

வலம்புரி தரளம் ஈனும்

சங்குகளையும் முத்துக்களையும்  (தெருக்களிலே) பிரஸவிக்கப்பெற்ற

காழி …………..சேர்மின்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளிலுள்ள வலம்புரி யென்ற சொற்களில், வலம் என்ற வடசொல் விகாரம் – புற்றுமறிந்தனபோல – புற்றுக்களைச் சிதைப்பது எப்படி எளிதான காரியமோ அப்படி எளிதாகவே அரக்கன் முடிகள் பத்தையும் சிதைத்தமையைச் சொன்னபடி

திரை நீத்து இத்யாதி – கடலிலே வாழ்ந்து கொண்டிருந்த சங்குகளானவை  இத்தலத்தின் நீர்வளத்தைப் பார்த்துக் கடலில் வாஸத்தை இகழ்ந்து விட்டிட்டு இத்தலத்தில் தாழைகள் மலிந்த கழிகளிலே வந்து சேர்ந்து, பிறகு, வயல்களிலே சென்று பாய்கின்ற அக்கழிகள் மூலமாக வயல்களிலே வந்து சேர்ந்து, அவ்விடத்தில் மiர்நீர்தேங்கி நின்று அது வாய்க்காலாலே ஊரிலே வந்து புகுர அவ்வழியாலே தெருக்களிலே வந்தேறி, அந்நீர்வழந்தவாறே பின்னைப் போகமாட்டாதே அவ்விடந்தன்னிலே கிடந்து சங்குகளையும் முத்துக்களையும் ப்ரஸவிக்கின்றனவாம்.  இத்தால் நீர்வள நிலவளங்கள் சொல்லப்பட்டன.

 

English Translation

Head after head of the demon did role like white-ant-hill-canker in the Warfield, Hit by the arrows of strong-arm Rama. Those who would join His feet go to the Kali, waters from ocean deep rise high in the sky, fall as rain, flow into rivulets and tanks, Then go through fertile fields fenced by screw pine: Seerama Vinnagar, O People, go to!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top