(1151)

(1151)

மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,

கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து

சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,

சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே.


பதவுரை

அவன் குலம் மகற்கு இன் அருள்  கொடுத்தவன் இடம்

அவளது சிறந்த மகனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு நல்ல க்ருபை பண்ணின பெருமான் வாழுமிடமாவது;

மிடைந்து

ஒன்றோடொன்று நெருங்கி

சாறுகொண்ட

ரஸமயமா யிருக்கிற

மெல் கரும்பு இள கழை

மெல்லிய கரும்பின் இளந்தடிகளானவை

தகை விசும்பு உற

(தங்களை விம்மி வளரவொட்டாமல்) தடை  செய்கின்ற ஆகாசத்தைக் கிட்டி    வளர்ந்திருப்பதனால்

மணி நீழல்

அழகிய நிழலையுடையதும்

சேறுகொண்ட தண் பழனமது எழில் திகழ்

(கருப்பஞ் சாற்று வெள்ளத்தினால்) சேற்றையுடைத்தாய் குளிர்ந்த நீர்நிலங்களின் அழகு விளங்கப் பெற்றதுமான

திரு அயிந்திரபுரம்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குலமகற்கு = ‘குலம்’ என்ற சொல் சிறப்புப் பொருள் பெறும். மகன் +கு; மகற்கு. தகை விசும்பு = வினைத்தொகை; தகைகின்ற விசும்பு.  இது அதிசயோக்தி.

 

English Translation

The Asura king Hiranya cultivated hate and anger. The Lord tore apart his chest and graced his good son. He resides in Tiruvayindirapuram where tender sugarcane shoots grow densely reaching the sky, giving shade to wetlands which exude beauty.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top