(1146)

(1146)

தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,

காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,

சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,

தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

 

பதவுரை

தூ வடிவின்

அழகிய வடிவையுடைய

பார்மகள் பூ மங்கையோடு

பூமிப்பிராட்டியோடும் பெரிய பிராட்டியோடும் கூடி

இருபால்

இரண்டு திருக்கைகளிலும்

சுடர் ஆழி சங்கு பொலிந்து தோன்ற

திருவாழி திருச்சங்குகள் பள பளவென்று விளங்க

காவடியின் கற்பகம் போல நின்று

சோலைசெய்திருக்கின்ற கற்பகம்போல நின்று

கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை

பக்தர்களுக்குக் கிருபைபண்ணுந் திருவுள்ளமுடையவனும்,

சே அடி கை திருவாய் கண் சிவந்த ஆடை

சிவந்த திருவடிகள் திருக்கைகள் திருப்பவளம் திருக்கண் திருப்பிதாம்பரம் இவற்றோடு கூடி

செம் பொன் செய் திரு உருவம்  ஆனான் தன்னை

செம்பொன் போன்ற திருமேனியையுடையவனுமான பெருமானை

தீ வடிவின் சிவன் அயன் போல் வார்மன்னு

நெருப்புப் போன்ற வடிவை யுடையனான சிவனும் பிரமனும்   போல அரிய பெரிய காரியங்கள் செய்யவல்ல மஹான்கள் பொருந்தியிருக்கிற

திருக்கோவலூரதனுள். நான் கண்டேன்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காவடி விற்கற்பகம்=கப்பும் கிளையுமாகப் பணைத்துப் பெரிய சோலைபோலே பரந்து விளங்குகிற கல்பவ்ருக்ஷத்தை எம்பெருமானுக்கு உவமை கூறலாமேயன்றி வெறும் கல்பவ்ருக்ஷத்தை உவமை கூறலாகாதென்க.  கா—-சோலை.  கல்பகம்—-வேண்டுவார்வேண்டின வற்றையெல்லாம்; அளிப்பது என்று காரணப்பெயர்ஃ

தீவடிவிற்சிவன் ® “ஓருருவம் பொண்ணுவருவம் ஒன்று செந்தி” என்பர் திருநெடுந் தாண்டகத்திலும்.

 

English Translation

A beautiful form with Dame Earth and lotus-dame Lakshmi resplendent with conch and discus on either side appears like a forest of Kalpaka trees, gracing the devotees with a benevolent heart, with red lotus feet, hands, lips and eyes, – even his robes are red, his jewels are of red gold, -his glorious form is worshipped by Siva, Brahma and the other gods. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top