(1131)
அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.
பதவுரை
|
அண்டமும் |
– |
அண்டங்களையும் |
|
எண் திசையும் |
– |
எட்டுத்திசைகளையும் |
|
நிலனும் |
– |
பூமியையும் |
|
அலை நீரொடு |
– |
கடல்களையும் |
|
வான் |
– |
ஆகாசத்தையும் |
|
எரி |
– |
அக்நியையும் |
|
கால் |
– |
காற்றையும் |
|
முதலா |
– |
இவை முதலான மற்றும் பல பொருள்களையும் |
|
உண்டவன் |
– |
(பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கின |
|
எந்தைபிரானது |
– |
எம்பெருமானுக்கு |
|
இடம் |
– |
இடமாவது, |
|
ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய உச்சி-. |
||
|
பண்டு ஒருகால் |
– |
முன்னொரு காலத்தில் |
|
செருவில் |
– |
போர்க்களத்திலே |
|
விரைந்தார் |
– |
சண்டை செய்ய விரைந்து வந்தவர்களான |
|
விண்டவர் |
– |
பகைவர்கள் |
|
இண்டை |
– |
நெருங்கின (தங்களது) |
|
குழாமுடனே |
– |
கூட்டங்களோடே |
|
இரிய |
– |
சிதறியோடும்படி |
|
முனிந்து |
– |
சீறி |
|
வளைத்தான் |
– |
வில்லைவளைத்தவனான பல்லவராஜன் |
|
பணிந்த |
– |
கைங்கரியம் செய்யப்பெற்ற |
|
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “செருவில் வளைத்தான்” என்று கூட்டி அந்வயித்து, செரு—போர்செய்கின்றவில் வில்லை, வளைத்தான் என்றுரைப்பாருமுண்டு. வளைத்தான் என்பதற்கு, சூழ்ந்துகொண்டானென்றும் பொருளுண்டாகையால், சிதறியோட வேண்டும்படி பகைவரை ஆக்ரமித்துக் கொண்டானென்றும் உரைக்கலாம்
English Translation
The Universe, the eight Quarters, the Earth, the ocean, the sky, the fire, the wind and all else were swallowed in a trice by my Lord and master, the resident of beautiful Kanchi surrounded by golden mansions. The Pallava king who wielded his bow to disperse hordes of enemies in war, comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.
