(1119)
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும்,
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,
வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த,
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
பதவுரை
|
இமையோர் |
– |
தேவர்கள் |
|
வேதம் உரைத்து |
– |
வேத வாக்கியங்களைச் சொல்லி |
|
வணங்கும் |
– |
வணங்க நின்ற |
|
வெம் திறல் வீர்ரில் வீரர் ஒப்பார் இவர் |
– |
மிக்க வலிவுகொண்ட வீரர்களிலுங் காட்டில் மஹாவீரரான இராமபிரானைப் போன்றுள்ள இப்பெரியவர் |
|
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர்கொல் |
– |
அழகிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடின முதலாழ்வார்கள் வணங்கப் பெற்ற திருவேங்கடமுடையானோ? |
|
தெரிக்க மாட்டேன் |
– |
அறிகின்றிலேன்; |
|
மாவலி வேள்வியில் |
– |
மஹாபலியின் யாகபூமியிலே |
|
குறள் உரு ஆய் வந்து |
– |
வாமநவுருக் கொண்டுவந்து |
|
(மாவலி நீர் வார்த்து தத்தம் பண்ணினவாறே) |
||
|
நிமிர்ந்து |
– |
திரிவிக்கிரமனாக வளர்ந்து |
|
மண் அளந்த |
– |
பூமியை அளந்துகொண்ட |
|
அந்தணர் போன்ற இவர் ஆர் கொல் என்ன |
– |
பிரமசாரியைப் போலுமிரா நின்ற இப்பெரியவர் ஆர்? என்ன, |
|
அட்புயகரத்தேன் என்றார்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘வேதமுரைத்திமையோர் வணங்கும்” என்ற விசேஷணத்தைச் செந்தமிழ் பாடுவார்க்கு இயைக்கலாமென்பர் சிலர்.
English Translation
Valliant among the valiant warriors, worshipped by the Vedic seers, worshipped by the singers of pure Taxnil poems, I could not guess who this was. He looked like the Vedic lad who came as a manikin in Maballi’s sacrifice and grew to take the Earth. Who could this be, I wondered,” I am the Lord of Attabuyakaram!” he said.
