(1109)

(1109)

துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,

குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,

வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,

இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

 

பதவுரை

இடவெந்தை எந்தை பிரானே!- ;

மால் இனம் மொழியாள்

தன்னுடைய வியாமோஹத்துக்குத் தகுதியான பேச்சையுடையளான இப்பெண்பிள்ளையானவள்,

துளம்படு முறுவல்

மாதுளம் விரைபோன்ற பற்களினின்றும் உண்டாகின்ற புன்சிரிப்பை

தோழியர்க்கு

தன் தோழிமார்களை நோக்கி

அருளாள்

அருள்கின்றாளில்லை;

துணை முலை

சேர்த்தியழகுடைய முலைகளை

சாந்து கொண்டு

சந்தனத்தாலே

அணியாள்

அலங்கரிக்கின்றாளில்லை

குளம் படு குவளை கண் இணை

தடாகத்திலுள்ள (செவ்வி மாறாத) குவளை மலர் போன்ற கண்களில்

எழுதாள்

மையிட்டுக்கொள்கிறாளில்லை;

குழற்கு

கூந்தலில்

கோலம் நல் மலர் அணியாள்

அழகிய சிறந்த புஷ்பங்களைச் சூட்டிக் கொள்ளுகிறாளில்லை

வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும்

(ரத்னம் முதலிய) நற்சரக்குகளுக்கிடமான கடலால் சூழப்பட்ட பூமியை முன்னொருகால் அளந்த மால் ஸர்வேச்வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்;

இளம் படி இவளுக்கு என் நினைந்திருந்தாய்

(விரஹம் பொறாத) ஸுகுமாரஸ்வபாவையான இவள் விஷயத்திலே என்ன செய்வதாகத் திருவுள்ளம்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டால் ஆழ்வார் தாம் சொல்லிக்கொள்வதாவது:- பிரானே! இவ்வுலகில் என்னோடுகூட ஸஜாதீயர்களாயுள்ள மனிசரீடத்தில் எனக்கு நேசமுண்டாவதில்லை; அவர்களோடு உல்லாஸமாகப் பேசுவதற்கு விருப்பமுண்டாவதேயில்லை;  தேஹத்தையே பேணித்திரிகின்ற பிராகிருதர்களோடு ஒப்புடையேனல்லேன்;  ஊர்வம்புகளைப் பிதற்றிப் போதுபோக்குவாரைப் போலன்றியே எப்போதும் உனது திவ்யசேஷ்டிகளையே வாய்வெருவிக் கொண்டிருக்கிறேன்; என்னுடைய பேச்சுக்களை நீ ஆராய்ந்தால் நான் உன்பக்கல் கொண்டுள்ள வியாமோஹம் நன்கு புலப்படும்; என்வடிவைக் கண்டாயாகில் நான் உனது பிரிவை ஒருநொடிப்பொழுதும் ஆற்றகில்லேனென்பது விளங்கும்;  இப்படிப்பட்ட என்னை நீ அபேஷிகிறாயோ, உபேஷிக்கிறாயே? சொல்லாய் பெருமானே! என்றாராயிற்று.

 

English Translation

Her pomegranate smile face flashes for her friends no more, no more does she apply Sandal her twin breasts. Her lake-grown-lotus eyes whiten without collyrium, no more does she coiffure her dark hair. “He did take the wealthy ocean and the Earth in yore”, she sings in her ever-rising madness. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top