(1101)
விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே.
பதவுரை
|
விண்டாரை |
– |
சத்துருக்களை ராவணாதி ராக்ஷஸர்களை |
|
வென்று |
– |
தோற்கடித்து |
|
ஆவி விலங்கு உண்ண |
– |
(அவர்களுடைய) உயிரை (நாய் நரி முதலிய) மிருகங்கள் மேல்விழுந்து முடிக்கும் படியாகவும், |
|
மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம் |
– |
மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை |
|
அழல் ஏற |
– |
அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும் |
|
வெம் சமத்து |
– |
பயங்கரமான போர்க்களத்திலே |
|
கண்டாரை |
– |
பார்த்துக்கொண்டிருந்த |
|
கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை-; |
||
|
கொண்டாடும் நெஞ்சுஉடையாரவர் |
– |
புகழ்ந்து பேசும்படியான நெஞ்சுபடைத்த பாகவதர்கள் |
|
எங்கள் குலம் தெய்வம் |
– |
எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அஹங்காரிகளான ஆஸூரப்ரக்ருதிகளின் உடலை நாயும் நரியும் பிடுங்கி தின்னும்படியாகவும், மாதர்களேறியநுபவித்த அவர்களது மார்பை அக்நிபகவானேறி அநுபவிக்கும்படியாகவும் போர்க்களத்திற் செய்த பகவான் நம்முடைய அஹங்காரத்தையும் தொலைத்து நம்மை ஆட்கொள்ளுதற்காகத் திருக்கடன்மல்லையிலே வந்து தரைக்கிடை கிடக்கிறார்; எனக்கு அவர் உத்தேச்யரல்லர்; அவரைக் கொண்டாடிக்கொண்டு போதுபோக்குகின்ற பாகவதர்களே எனக்கும் எனது குலத்துக்கும் உத்தேச்யர்-என்றாராயிற்று.
English Translation
The Lord who defeated enemies in war, -soft natured ones world caress their wide chest, – and made their bodies food for the jackals, or be consumed by fire, resides in Kadal Mallai Talasayanam. Those who rejoice over him are our tutelary gods.
