(1100)

(1100)

ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான்,

வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,

கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற,

ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே.

 

பதவுரை

ஏனத்தின் உரு ஆகி

வராஹரூபியாய்த் திருவவதரித்து

நிலம் மங்கை

பூமிப்பிராட்டியை

எழில்

(முன்னிருந்த அழகு சிறிதும் குறையாமல்) அவ்வழகுடனே

கொண்டான்

(அண்டபித்தியில் நின்றும்) மீட்டுக்கொணர்ந்தவனும்,

வானத்திலவர்

தேவர்கள்

மகிழ்ந்து

ஆநந்தத்துடனே

முறையால்

தங்கள் தங்கள் அதிகாரத்திற்குத் தகுதியாக

ஏத்தி

துதிக்க

வலம் கொள்ள

பிரதக்ஷிணம் செய்வதற்குப் பாங்காக,

கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற

காட்டினிடையேயிருக்கிற திருக்கடல்மல்லையிலெழுந்தருளியிருப்பவனும்,

ஞானத்தின் ஒளி உருவை

ஞானலொளிபொருந்திய திருமேனியையுடையவனுமான பெருமானை

நினைவார்

சிந்திக்கும் பாகவதர்கள்

என் நாயகர்

அடியேனுக்குத் தலைவராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

திருக்கடல்மல்லையில் ஞானப்பிரான் என்ற திருநாமத்துடனே திருக்கோயில் கொண்டிராநின்ற எம்பெருமானை மங்களாசாஸநம் செய்தருளுகிறார் இதில்.

நிலைமைமாறி அழகு அழிந்திருந்த பூமிப்பிராட்டியின் அழகை மறுபடியும் பழையபடியே நிலை நிறுத்தினான் என்பார் நிலமங்கை யெழில் கொண்டான் என்றார்.

இரண்டாமடியினிறுதியில் “வரங்கொள்ள” என்று பாடமாகில், தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு என்று பொருளாகுக.

ஞானத்தினொளியுரு= ஞானப்ரகாசமே உருவெடுத்து நிற்பவன்;

ஞானவொளிமயமான திவ்யமங்கள விக்ரஹமுடையவன்.

 

English Translation

He came as a boar and took the beautiful Dame Earth. The celestials worship him with method and circumambulate him with joy. He is a body of knowledge-light residing in Kadal Mallai Talasayanam by the forest. Those who contemplate him are our masters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top