(1081)

(1081)

தாங்காததோ ராளரி யாயவுணன் – றனைவீட முனிந்தவ னாலமரும்,

பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,

பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,

நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

 

பதவுரை

தாங்காதது

எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத

ஓர் ஆளி அரி ஆய்

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி

அவுணன் தனை

(ஹிரண்யனென்னும்) அஸூரனை

வீட முனிந்து

முடியுமாறு சீறி,

அவனால் அமரும்

அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த

பூங்கோதையர்

பெண்டுகள்

பொங்கு எரி மூழ்க

எரிகிற நெருப்பிலே புகும்படி

விளைத்து

செய்தவனாயும்

அது அன்றியும்

அதுவுமல்லாமல்,

முன்

முன்னே

வென்றி கொள் வாள் அமரில்

வெற்றியையுடைய பெரிய போர்க்களத்திலே

ஐவரொடு

பஞ்சபாண்டவர்களோடே

பாங்கு ஆக அன்பு அளவி

அவர்களுக்குத் தக்கபடி உறவு பண்ணிக் கலந்து,

படை

ஆயுதங்களை யுடையவர்களான

பதிற்றைந் திரட்டி வேந்தர் பட

நூற்றுவரான துரியோதனாதிகள் முடிந்துபோம்படி செய்தவனாயும்

நீங்கா செருவில்

மாளாத அப்பெரும் பூசலினாலே

நிறை

(த்ரௌபதியின்) நலத்தை

காத்தவனுக்கு

ரக்ஷித்தவனாயுமுள்ள ஸர்வேச்வரனுக்கு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீங்காச்செருவில் நிறைகாத்தவனுக்கு என்றவிடத்து, “பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழல் மனனர் கலங்கச் சங்கம்வாய்வைத்தான்” என்ற பாசுரமும், “அர்ஜூனநனுக்கு தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்தியுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” என்ற ஸ்ரீவசநபூஷண ஸூக்தியும் அநுஸந்திக்கத்தக்கன.

 

English Translation

The Lord came as a terrible man-lion with Uncontrollable rage and killed the angry Hiranya, dispatching his flower-decked queens into the fire. Then in the victorious war, he befriended the five Pandavas, killed the mighty hundred and protected Draupadi’s fair name. Tirunirmalai is His great hill abode.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top