(1077)

(1077)

மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும்,

தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை,

கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி,

சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே.

 

பதவுரை

மன்னு தண் பொழிலும்

நித்தியமாய் குளிர்ந்த சோலைகளும்

வாவியும்

நீர் நிலங்களும்

மதிளும்

மதில்களும்

மாடம் மாளிகையும்

மாட மாளிகைகளும்

மண்டபமும்

மண்டபங்களும் உண்டாம்படி

தென்னன் தொண்டையர்கோன் செய்த

பாண்டிய குலத்தவனான தொண்டைமான் சக்கரவர்த்தி  நிருமித்த

நல் மயிலை திரு அல்லிக்கேணி நின்றாணை

அழகியமயிலைக்கடுத்த திருவல்லிக்கேணியிலே  நின்றளும் பெருமான் விஷயமாக,

கன்னி நல் மாடம் மங்கையர்தலைவன்

அழிவில்லாத நல்ல மாடங்களையுடைய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்

காமரு சீர்

சிறந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மியை உடையவருமான

கலிகன்றி

திருமங்கையாழ்வார்

சொன்ன

அருளிச்செய்த

சொல் மாலை பத்து உடன்

சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்

வல்லார்

ஓதவல்லவர்கள்

சுகம் இனிதுவான் உலகு

ஆநந்தமயமான பரமபதத்தை

ஆள்வர்

ஆளப்பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மலயத்வஜனென்கிற பாண்டிய ராஜனுக்குத் தென்னன் என்று பெயர்; “கொன்னவில் கூர்வேல்கோன் நெடுமாறன் தென்கூடல்கோன், தென்னன்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் காண்க.  தொண்டைமான் சக்ரவர்த்தி அத்தென்னனுடைய வம்சத்தில் தோன்றினமைபற்றித் தென்னன் தொண்டையர்கோன் என்றருளிச் செய்யப்பட்ட்தென்று சொல்லக் கேட்டிருக்கை.

அழகிற் சிறந்த மாதர்கள் வாழுமிடமாயிருந்தாலும் “ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலை” என்று ஆழ்வார் தாமும் அருளிச் செய்திருக்கையாலும் மஹிளாபுரீ என்ற வடமொழியிலும் மயிலை என்று தென்மொழியிலும் வழங்கப்பட்டு வந்ததே மயிலாப்பூரென்பதாம்.  அதன் ஸமீபத்திலுள்ள காரணம்பற்றி மயிலைத் திருவல்லிக்கேணி எனப்பட்டது.  மஹிளா என்ற வடசொல்-சிறந்த மாதர் என்று பொருள்படும் “மயூரபுரீ” என்றும் சிலர் வழங்குவர்.

 

English Translation

The Tondaman king laid out the Mayilai-Tiruvallikkeni city with lakes, gardens, mansions, garrison walls and Mandapas. This garland of poems by the handsome kalikanri, king of mansioned Mangai-tract, sings of the Lord residing in the temple of Tiruvallikkeni. Those who master it will enjoy life here and rule over heaven.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top