(1067)
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே.
பதவுரை
|
தொண்டர் |
– |
பக்தர்கள் |
|
இண்டை கொண்டு |
– |
புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு |
|
ஏத்த |
– |
துதிக்கும்படியாக |
|
எவ்வுள் கிடந்தானை |
– |
திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக, |
|
வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன் |
– |
வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார் |
|
கொண்ட சீரால் |
– |
நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே |
|
தண் தமிழ் செய் |
– |
அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த |
|
மாலை |
– |
சொல்மாலையாகிய |
|
ஈர் ஐந்தும் |
– |
இப்பத்துப் பாசுரங்களையும் |
|
வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
|
அண்டம் ஆள்வது ஆணை |
– |
இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்; |
|
அன்றேல் |
– |
இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில் |
|
அமரர் உலகு ஆள்வர் |
– |
பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள். |
|
அமருலகு |
– |
அமரருவகு. |
English Translation
The Lord reclines in Evvul, Worshipped by devotees with garlands, kaliyan, the king of the Mangai-tract with bee-humming groves, has sung this garland of cool Tamil songs. Those who master it will rule not only the Earth but also the world of the eternals, this is certain.
