(1066)

(1066)

பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்,

வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன்,

அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,

இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

 

பதவுரை

பந்து இருக்கும் மெல் விரலாள்

பந்து தங்கிய மெல்லிய விரல்களை யுடையவளும்

பனி மலரான்

குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையவளுமான

பாவை

பிராட்டியானவள்

வந்து இருக்கும் மார்வன்

வந்து தங்கி வாழ்கின்ற திரு மார்பை யுடையவனாய்

நிலம் மேனி மணி வண்ணன்

நீலமான நிறத்தையுடைய மணியின் வர்ணம் போன்ற வர்ணத்தை யுடையவனாய்

அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த இந்திரற்கும் தம்பெருமான்

சுவர்க்கத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு நாதனாக அமைந்த இந்திரனுக்கும ஸ்வாமியானவன்

எவ்வுள் கிடந்தான்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பந்திருக்குமெல்விரலாள் என்றது – ஒருநாளும் பிரிந்து வருந்தாமல் நித்ய ஸம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய்க் கொண்டிருப்பவ ளென்றபடி.  மாதர்க்குரிய அடைமொழி இது.

 

English Translation

The cool eyed thin-fingered ball clasping lotus-dame Lakshmi resides forever in the chest of the blue gem Lord. Indra the lord of the celestials far above, comes and offers worship. He is our Lord, he reclines in Evvul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top