(996)
தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்*
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய*
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே!
பதவுரை
| தொண்டு ஆம் இனமும் |
– |
தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும் |
| இமையோரும் |
– |
நித்யஸூரிகளும் |
| துணை நூல் மார்வில் அந்தணரும் |
– |
யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும் |
| அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில் |
– |
‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும், |
| அருகு எல்லாம் |
– |
சுற்றுப்பிரதேசங்களெங்கும் |
| வண்டு ஆர் பொழிலின் பழனத்து |
– |
வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில் |
| வயலின் அயலே கயல் பாய |
– |
கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள |
|
(அதனால்( |
||
| தண்தாமரைகள் முகம்மலர்த்தும் |
– |
குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள |
| சாளக்கிராமம் |
– |
ஸாளக்ராமத்தை |
|
நெஞ்சே!, அடை-. |
||
#996
தொண்டு ஆம் இனமும் இமையோரும் * துணை நூல் மார்வின் அந்தணரும் *
அண்டா ! எமக்கே அருளாய் என்று * அணையும் கோயில் அருகு எல்லாம் **
வண்டு ஆர் பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல் பாயத் *
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் * சாளக்கிராமம் அடை நெஞ்சே! —(1-5-9)
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * *:–(தொண்டாமினமும்.) “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும், பரமபதத்தில் பரத்வத்தை அனுபவிப்பதிற் காட்டிலும் இங்குள்ள ஸௌசீல்ய ஸௌலப்யங்களை அநுபவிப்பதில் மிக்க ஆவல் கிளர்ந்து இங்கே வந்து திரண்ட நித்ய ஸூரிகளின் கோஷ்டி ஒருபக்கத்திலும், ‘நாம் உத்தமகுலத்திலே பிறந்தவர்கள் , ஸாமாந்யரோடு நாம் சேரலாகாது’ என்று கொண்டு ஒதுங்கி நிற்கும் யஜ்ஞோபவீததாரிகளான பிராமணர்களுடைய கோஷ்டி ஒருபக்கத்திலும் ஆக இப்படி பல திரள்களாக இருந்துகொண்டு ஒவ்வொரு கூட்டத்தாரும் ‘ஸ்வாமிந் ! எமக்கே அருள் புரியவேணும்; ஸ்வாமிந் ! எமக்கே அருள் புரியவேணும்’ என்று துதித்துக்கொண்டு அணைந்து நிற்கிற கோயில் – சாளக்கிராமம்.
அது இன்னமும் எப்படிப்பட்டது? — அருகெல்லாம் வண்டார். பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாயத் தண்டாமரைகள் முகமலர்த்தப் பெற்றதுமாம். அதாவது – ஸாளக்ராம க்ஷேத்ரத்தைச் சுற்றி, வண்டுகள் களித்து வாழும்படியான பூஞ்சோலைகள் இருக்கின்றனவாம்; அவற்றுள் அச்சோலைக்குத் தாரகங்களான நீர்நிலைகள் விசேஷமாக இருக்கின்றனவாம்; அவற்றின் ஸமீபத்தில் கயல் மீன்கள் நிறைந்த கழனிகள் உள்ளனவாம்; அங்கிருந்து அக் கயல் மீன்கள் துள்ளிப்பாய்ந்து சோலைகளிலுள்ள நீர்நிலைகளிலேயுள்ள தாமரை மொக்குகளின் மேல் விழுகின்றனவாம்; அதனால் அந்த மொக்குகள் விகஸித்து விளங்குகின்றன வென்று நிலவள நீர்வளங்களைச் சொன்னாராயிற்று.
”வயலினயலே கயல்பாய” என்றவிடத்து, “அயல்வயலின் கயல்பாய” என்று அந்வயித்து, ஸமீபத்திலுள்ள கழனிகளிலிருந்து கயல்கள் பாய எனப் பொருளுரைத்தலுமாம். அயல் – அருகும் இடமும். ….. ….. …. (9)
English Translation
Bands of devotees, hordes of gods and batches of twin-thread-house-holder Vedic seers, seek the Lord’s grace and come to worship him in his temple surrounded by bee-humming groves and watered fields where Kaya-fish dances and lotus blooms raise their cheerful faces. Go to Him in Saligrama, O Heart!
