(995)
வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து* ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று* என்
எந்தாய்! சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான்*
சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே!
பதவுரை
| வெந்தார் என்பும் |
– |
செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும் |
| சுடு நீறும் |
– |
சுட்ட சாம்பலையும் |
| மெய்யில் பூசி |
– |
சரீரத்தில் தரித்துக்கொண்டு |
| சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு |
– |
சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு |
| உலகு ஏழும் திரியும் |
– |
எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான |
| பெரியோன் தான் |
– |
பரமசிவன் |
| சென்று |
– |
கிட்டவந்து |
| என் எந்தாய் சாபம் தீர் என்ன |
– |
‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’ என்று பிரார்த்திக்க, |
| திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான் |
– |
தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை அளித்தவனான எம்பெருமான் |
|
(நித்யவாஸம் பண்ணுமிடமான) |
||
| சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் |
– |
சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை |
|
நெஞ்சே!, அடை-. |
||
#995
வெந்தார் என்பும் சுடு நீறும் * மெய்யில் பூசி கையகத்து * ஓர்
சந்து ஆர் தலைகொண்டு * உலகு ஏழும் திரியும் * பெரியோன் தான் சென்று **
என் எந்தாய்! சாபம் தீர் என்ன * இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான் *
சந்து ஆர் பொழில் சூழ்ந்த * சாளக்கிராமம் அடை நெஞ்சே! —(1-5-8)
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** *-(வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார். செத்துப் போனவர்களைப் பொசுக்கினபிறகு சுடுகாட்டில் விழுந்துகிடக்கிற எலும்புகளை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டும், சாம்பலை உடம்பிலே பூசிக்கொண்டும், தந்தையின் தலையைக் கிள்ளியதனால் கையிலொட்டிக்கொண்ட கபாலத்துடன் உலகமெங்குந் திரிந்து பிச்சை யெடுத்த பரமசிவன் கடைசியாக எம்பெருமானிடம் வந்து ‘ஸ்வாமீ! என்னுடைய ப்ரஹ்மஹத்தி சாபத்தைத் தீர்த்தருள வேணும்’ என்று பிரார்த்திக்க, திருமார்பிலிருந்து வேர்வை நீரை யெடுத்துக் கபாலத்தி லேயிட்டு நிறைத்து சாபம் தீர்த்தவனான எம்பெருமானுடைய சாளக்கிராமத்தை நெஞ்சே! அடை!
என்பு – எலும்பு. சந்தார்தலை = எல்லா நரம்புகளும் வந்து கூடின விடத் திலே தலையைக் கிள்ளினனாதலால், சந்துகள் நிறைந்த தலை எனப்பட்டது. திரியும் பெரியோன் தான் சென்று = தனக்கு மேல் பெரியவனில்லையென்று மார்பு நெறித்துக் கிடந்தவனுக்கு இந்தக்கதி நேர்ந்ததென்று ஏசியவாறு. இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி :- கூறுசெய்த வூரிலே கையும் கைத்தளையுமாய்த் திரிவாரைப் போலே ஈச்வராபிமாநியாய்த் தன் ஆஜ்ஞை நடத்திப் போந்தவிடத்திலே கையும் ஓடுமாய்த் திரிந்த துர்மாநியானவன் என்று. [“கூறுசெய்த வூரிலே “– தான் அரசாண்ட வூரிலே. கைத்தளை – கை விலங்கு) … … … … (8)
English Translation
God Siva smears himself with the ashes of cremated bodies and carries a hole-ridden skull, roaming the seven worlds. He went to our benevolent Lord and begged to be rid of the curse on him, whereupon the Lord filled the skull-bowl with the sap-of-his-heart blood. He resides amid Sandal groves. Go to Him in Saligrama, O Heart!
