(982)
பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட, பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய்விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
வந்த |
– |
(யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான |
|
பேய் |
– |
பூதனையினுடைய |
|
இடைக்கு இருந்து |
– |
இடுப்பிலேயிருந்துகொண்டு |
|
அவள்தன் |
– |
அப்பேய்மகளுடைய |
|
பெரு முலை |
– |
பெரிய முலையை |
|
சுவைத்திட |
– |
ருசிபார்த்து உண்ண |
|
பெற்ற தாய் |
– |
(அதைக்கண்ட) யசோதையானவள் |
|
இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட |
– |
(‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக |
|
வளர்ந்த |
– |
வளர்ந்தவனான |
|
எம் தலைவன் |
– |
அஸ்மத் ஸ்வாமி |
|
(எவ்விடத்திலுள்ளானென்னில்;) |
||
|
சேய் முகடு உச்சி |
– |
உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே |
|
அண்டம் சுமந்த |
– |
அண்டத்தைச் சுமக்கிற |
|
செம் பொன் செய்விலங்கலில் |
– |
மேரு பர்வதத்திலே |
|
இலங்கு |
– |
விளங்குகின்ற |
|
வாய்முகடு |
– |
விசாலமான சிகரத்தில் நின்றும் |
|
முன் இழிந்த |
– |
ப்ரவஹிக்கின்ற |
|
கங்கையின் |
– |
கங்கைநதியினுடைய |
|
கரை மேல் |
– |
கரைமீதுள்ள |
|
வதரியாச்சிராமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
|
உள்ளான் |
– |
எழுந்தருளியிருப்பவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
பேயிடைக்கிருந்துவந்தமற்றவள் தன் பெருமுலைசுவைத்திட * பெற்ற தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திடவளர்ந்தவென் தலைவன் * சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய்விலங்கலிலிலங்கு * வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
****:–(பேயிடைக்கிருந்து.) கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில் பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையுண்டு அவளை முடித்தவரலாறு கீழ்த் திருமொழி முதல்பாட்டினுரையிற் கூறப்பட்டது. வந்த பேயிடைக்கிருந்து அவள் தன் பெருமுலை சுவைத்திட என்று அந்வயம். யசோதையைப்போலவே வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய மடியிலே நன்மகன் போல இருந்து அவளது முலையையுண்டு அவளை முடிப்பதுஞ்செய்த ஸ்ரீ கிருஷ்ணசிசுவைக் கண்ட தாயானவள், ‘அப்பப்ப! இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக்கூடாது! முலையுண்கிறபாவனை யில் உயிரை முடிக்கும் பிள்ளை இது; இதன் இயல்வுக்கு அஞ்சவேண்டியிருக் கிறது’ என்று கூசும்படியாக அவ்வளவு .சூரனாய்வளர்ந்த தலைவன் எழுந்தருளி யிருக்குமிடம் வதரியாச்சிரமம்.
பெற்ற தாய் இடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட = இப்பிள்ளையை நாம் மடியிலே வைத்து முலைகொடுத்துப் பழக்கினபடியாலன்றோ இவன் கண் டார் மடியிலும் பொருந்தி முலையுண்கிறது ; இனி நாம் இவனை இடுப்பிலெடுத் துக் கொள்ளவேகூடாது என்று கூசினாள் யசோதை என்னவுமாம்.
வதரியாச்சிரமம் கங்கையின் கரையிலுள்ளது; அக்கங்கை எப்படிப்பட்ட தென்னில்; ஓங்கியிருந்துள்ள சிகரத்தின் உச்சியிலே அண்டத்தைத் தரிக்கிற செம்பொன்மலை யாதொன்றுண்டு-மேருபர்வதம்; அதிலே விளங்குகின்ற விசாலமான சிகரத்தினின்றும் இழிந்ததாம். அண்டம்-மேலுலகம். அண்டமும் என்ற விடத்து உம்மை-இசை நிறை. … … (ரு)
English Translation
The Lord my master grew up wondrously; –he lay on the lap of the ogress and sucked her big breasts, seeing which the good mother Yasoda trembled with fear. The river Ganga flows from between two golden peaks on the tall mountain that bears the Universe. He resides on its banks, in Vadari-Ashrama.
