(981)
துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே. தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும் பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து,
அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
மனமே |
– |
நெஞ்சமே!, |
|
இனி உனக்கு துணிவு சொல்லுவன் |
– |
இதுமுதலாக உனக்கு இருக்க வேண்டிய உறுதியைச் சொல்லுகிறேன் (கேள்); |
|
தொண்டர்கள் தமக்கு |
– |
ஆச்ரிதர்களுக்கு |
|
பிணிஒழித்து |
– |
வியாதிகளைப்போக்கி |
|
அமரர் பெரு விசும்பு அருளும் |
– |
நித்ய ஸூரிகளுடையதான பரமபதத்தை (அவர்கட்கு) அளித்தருளாநின்ற |
|
பேர் அருள் ஆளன் |
– |
பரமதயாளுவான |
|
எம்பெருமான் |
– |
ஸர்வேச்வரனை |
|
தொழுது எழு |
– |
வணங்கி உஜ்ஜீவிக்கக் கடவை; |
|
(அப்பெருமான் எவ்விடத்திலுள்ளானென்னில்;) |
||
|
அணி நீர் |
– |
(கங்கையிலுள்ள) அழகிய ஜலமானது |
|
மலர் அணி குழலார் அரம்பையர் |
– |
புஷ்பங்களை யணிந்த கூந்தலையுடைய அப்ஸரஸ் ஸ்த்ரீகளினுடைய |
|
துகிலும் |
– |
சேலைகளையும் |
|
ஆரமும் |
– |
ஹாரங்களையும் |
|
வாரி வந்து |
– |
திரட்டிக்கொண்டுவந்தும் |
|
மணி கொழித்து |
– |
ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும் |
|
இழிந்த |
– |
ப்ரவஹிக்கப்பெற்ற |
|
கங்கையின் |
– |
கங்காநதியினுடைய |
|
கரை மேல் |
– |
கரைமேலுள்ள |
|
வதரி ஆச்சிரமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
|
உள்ளான் |
– |
எழுந்தருளியிருக்கிறான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே! தொழுதெழுதொண்டர்கள் தமக்கு *
பிணியொழித்தமரர்பெருவிசும்பருளும் பேரருளாளனெம்பெருமான்*
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து * அணிநீர் மணிகொழித்திழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
****-(துணிவினியுனக்கு.) நெஞ்சே! இப்போது உனக்கு உறுதியாக ‘ஒரு நல்வார்த்தை சொல்லுகிறேன் கேள். அதுயாதெனில்; தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிராநின்றான்; அங்கே சென்று அவனை நீ வணங்கி உஜ்ஜீவிக்கக்கடவை ; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதிச்சொல்.
அந்த வதரியாச்சிரமம் கங்கைக்கரையிலுள்ளது; கங்கை எப்படிப்பட்ட தென்னில்; கண்ணன் செய்கிற காரியமெல்லாம் செய்யும் அக்கங்கை தானும்; அவன் ஓ “ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளை துகில் கைக்கொண்டு, காற்றிற் கடியனாய் ஓடி” என்றபடி ஆய்ச்சிகளின் துகில்களையும் ஹாரங்களையும் வாரிக்கொண்டு ஓடுவது போல், மேலுலகத்து மாதர்களுடைய வஸ்த்ரங்களையும் முக்தாஹாரம் முதலியவற்றையும் வாரிக்கொண்டும் பல பல ரத்னங்களையும் தள்ளிக்கொண்டும் பெருகி ஓடுகின்றதாம் கங்கை. பெரிய ஆறுகள் தம்மிடத்து நீராடிக் கொண்டிருப்பவர்களுடைய வஸ்த்ர பூஷணாதிகளை அடித்துக்கொண்டுவருதல் இயல்பு. அரம்பையர்- தெய்வப் பெண்கள். ஆரம் — ஹாரம் என்ற வடசொல் திரிபு. …. ….. ….. …. …… (ச)
English Translation
Let me tell you, O Heart! Arise and worship the benevolent Lord my master, who dispels the pall of devotees and grants the rule of the wide sky of eternals. On the banks of the Ganga, where the pure waters wash gems from the ornaments worn by the fragrant coiffured celestial Rambha, –He resides in Vadari-Ashrama.
