(951)
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன் என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
பதவுரை
| வென்றியே வேண்டி |
– |
வெற்றியையே விரும்பியும் |
| வீழ் பொருட்கு இரங்கி |
– |
நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும் |
| வேல் கணார் கல்வியே கருதி |
– |
வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் |
|
(ஆக இப்படிகளாலே) |
||
| நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன் |
– |
நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான் |
| என் செய்கேன் |
– |
என்ன பண்ணுவேன்? |
| அன்று |
– |
முன்னொரு காலத்து |
| நெடு விசும்புஅணவும் பன்றி ஆய் |
– |
நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய் |
| பாரகம் கீண்ட |
– |
பூ மண்டலத்தை உத்தரித்த |
| பாழியான் |
– |
மிடுக்கையு டையனாய் |
| ஆழியான் |
– |
ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய |
| அருளே |
– |
க்ருபையினாலே |
| நான் நன்று உய்ய |
– |
நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி |
|
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன் -; |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “வென்றியேவேண்டி”, ‘நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட வேண்டியது போய் எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றி பெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன் ; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸ்வமும் இழந்தாற் போல் அது தவித்துக் கிடந்தேன் ; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியேயில்லையென்று துணிந்து கிடந்தேன் ; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சை யுடையேனான நான் என் செய்வது ! எப்படி உஜ்ஜீவிப்பது !! என்று தடுமாறிக் கிடந்தவளவிலே எம்பெருமானுடை நிர்ஹேதுகக் கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.
“வீழ்பொருட்கிரங்கி” – நசித்துப்போவதே இயல்வான உடலுக்காகக்கரைந்து என்றும் பொருள் கொள்ளலாம். “வேற்கணார்” – ஸ்த்ரீகளின் கண்ணுக்கு வேல் உவமை கூறப்படும். “நின்றவா” – நின்றவாறு என்றபடி.
“நெடுவிசும்பணவும் பன்றியாயன்று பாரகங்கீண்ட” வரலாறு: – ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கோட்டினாற் குத்திக் கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம். இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு ; 1. ”பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில், ஏராருருவத் தேனமா யெடுத்த வாற்றலம்மான்” என்று இவ்வாழ்வார் தாமே அருளிச் செய்துமுளர். ”நெடுவிசும்பணவும் பன்றி யாய்” என்றது – ஆகாசாவகாச மடங்கலும் விம்ம வளர்ந்தமையைச் சொன்ன படி. பாழியான் – மஹாபலசாலி. அருளே என்றது அருளால் என்றபடி; மூன்றனுருபு தொக்கி நிற்கிறது. …………………………………………………………………………………………………………. (௪)
1. பெரிய திருமொழி 8.8.3
English Translation
Looking for success, stooping to low ways, I sought to sex with lurid ones. My heart went roaming, –no one could stop me, –and alas; O what can I do now? The Lord of discus, who took a boar-foam, — his grace in store is a might-full. Well did he save me, — I know the Mantra, — Narayana is the good name.
