(904)

(904)

மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு

பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்

ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்

பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே

பதவுரை

மெய்எல்லாம்

–

மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்
போகவிட்டு

–

நீக்கிவிட்டு
விரி குழலாரில் பட்டு

–

விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு)
பொய் எல்லாம்

–

எல்லாவிதமான பொய்களையும்
பொதிந்து கொண்ட

–

நிறைத்துக்கொண்டிருக்கிற
போழ்க்கனேன்

–

க்ருத்ரிமனான அடியேன்
ஐயனே

–

ஸ்வாமின்!!

அரங்கனே!-;

உன் அருள் என்னும் ஆசை தன்னால்

–

தேவரீருடைய க்ருபையிலேயுண்டான ஆசையினாலே

வந்து நின்றேன்-;

(நான் எப்படிப்பட்டவனென்றால்)

பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன்

–

மனமொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்;
வந்து நின்றேன்

–

(தேவர் திருமுன்பே வெட்க மற்று) வந்துநின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி கதறி தேவரீர் உடைய கருணையொன்றைய எதிர்பார்திருப்பவனடியேன்  என்கிறார்.

மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப்பெற்ற உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற்போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்; அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை; விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன். ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற விச்வாஸமொன்றுமாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால் அக்கருணையிலுள்ள நசையாலே, வெட்கமும்  அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார்.

போழ்க்கன் – முறைகேடன், வழிதப்பினவன். ‘போட்கன்’ என்றலுமுண்டு. (ஙங)

English Translation

O Lord, Aranga! I am a vagabond full of vice, I have no integrity. I was caught in the net of coiffured dames. Desirous of your grace, I have come to you now. O False, false me! I stand before you shamelessly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top